நெய்வேலி மாற்றுக்கட்சியினர் தி.மு.க., வில் ஐக்கியம்

நெய்வேலி: நெய்வேலியில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.,வில் இணைந்தனர்.

நெய்வேலி சட்டசபை தொகுதிக்குட்பட்ட இந்திராநகர் ஊராட்சி, மாற்று குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த த.வா.க., நிர்வாகி இளையராஜா தலைமையில் த.வா.க., வின் ஊராட்சி செயலாளர்கள், கிளை செயலாளர்கள் மற்றும் பல்வேறு மாற்றுக்கட்சியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க., வேட்பாளர் சபா ராஜேந்திரன் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர்.

அப்போது சபா ராஜேந்திரன் பேசுகையில், மாற்றுக்கட்சிகளில் இருந்து வெளியேறி தி.மு.க.,வில் இணைந்த உங்களை வரவேற்கிறேன். தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றிடவும், நெய்வேலி தொகுதியில் நான் 3வது முறையாக வெற்றி பெற்றிடவும் நீங்கள் தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் வீட்டில் ஒருவனாக இருந்து உங்களது முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன் என்றார்.

Advertisement