விவசாயிகள், நெசவாளர்களுக்கு புதிய திட்டங்கள் செயல்படுத்துவேன் தே.மு.தி.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி உறுதி
திருத்தணி: “திருத்தணி தொகுதியில் விவசாயிகள், நெசவாளர்கள் அதிகளவில் உள்ளதால், விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் நல்ல திட்டங்களை செயல்படுத்துவேன்,” என, தே.மு.தி.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி உறுதியளித்தார்.
திருத்தணி சட்டசபை தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., வேட்பாளர் டி.கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார். இவர், தே.மு.தி.க., கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தொகுதி முழுதும் தீவிரமாக பிரசாரம் செய்து, முரசு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து வருகிறார்.
நேற்று, பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில், தே.மு.தி.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி, திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் திருத்தணி பூபதி மற்றும் ஒன்றிய செயலர்களுடன் வீதி, வீதியாக சென்று முரசு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது, வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:
திருத்தணி தொகுதியில் அதிகளவில் விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளனர். நானும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். தற்போதும் விவசாயம் செய்து வருகிறேன் என்பதால், விவசாயிகளின் கஷ்டம் எனக்கு நன்றாக தெரியும்.
ஆகையால், என்னை ஜெயிக்க வைத்தால், விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண் துறையின் மூலம் பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்துவேன். கூடுதல் நெல் கொள்முதல் நிலையம் திறப்பேன்.
கரும்பு விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையான, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவீனப்படுத்துவேன். முதல்வர் ஸ்டாலின் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் கட்டாயம் நிறைவேற்றுவார். ஐந்து ஆண்டுகளில் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றியுள்ளார்.
ஒவ்வொரு குடும்பத்தினருக்கும், 8,000 ரூபாய் கூப்பன் வழங்கி, வீட்டிற்கு தேவையான பொருட்களை குடும்ப தலைவர்களே கடைகளுக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம். நெசவாளர்களின் கோரிக்கையான ஜவுளி பூங்கா கொண்டு வருவேன். இத்திட்டங்களை செயல்படுத்த முரசு சின்னத்திற்கு ஓட்டளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
கேபிள் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஜனநாயகன்: ரசிகர்கள் அதிர்ச்சி
-
மேல்தள சுவர் இடிந்து விழுந்து சாலையில் சென்ற மூதாட்டி பலி :காரைக்காலில் பரபரப்பு
-
சுவற்றின் மீது பைக் மோதி வாலிபர் பலி
-
பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
-
இறந்த நபர்கள் யார் போலீசார் விசாரணை
-
கூலி தொழிலாளி மயங்கி விழுந்து பலி