வெயிலால் வறண்டு வரும் ஏரிகள் கவலையில் ஆழ்ந்த விவசாயிகள்
திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வருவதால், ஏரிகளில் நீர் இருப்பு குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வருகிறது. இதனால், குளம், கிணறு, குட்டை மற்றும் ஏரி உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் வறண்டு வருகின்றன.
குறிப்பாக, திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமாபுரம், பெரியகளக்காட்டூர், பழையனுார் உட்பட 30 கிராமங்களில், 34 ஏரிகள் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.
இதில், பல ஏரிகள் கோடைக்காலத்திலும் வற்றாமல் இருக்கும். இதை பயன்படுத்தி பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் வெயில் கொளுத்தி வருவதால், இந்த ஏரிகளில் 15 - -50 சத வீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
இதனால், இந்த ஏரி உபரிநீரை நம்பியிருந்த ஏராளமான விவசாயிகள், தற்போது விவசாயம் செய்ய முடியாமல் கவலை அடைந்துள்ளனர். ஏப்ரல் மாத இறுதிக்குள் அனைத்து ஏரிகளிலும் நீர் முழுதும் வறண்டு விடும் அபாயம் உள்ளதால், விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
மேலும்
-
கேபிள் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஜனநாயகன்: ரசிகர்கள் அதிர்ச்சி
-
மேல்தள சுவர் இடிந்து விழுந்து சாலையில் சென்ற மூதாட்டி பலி :காரைக்காலில் பரபரப்பு
-
சுவற்றின் மீது பைக் மோதி வாலிபர் பலி
-
பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
-
இறந்த நபர்கள் யார் போலீசார் விசாரணை
-
கூலி தொழிலாளி மயங்கி விழுந்து பலி