மத்திய ஆசியாவிலும் யு.பி.ஐ., பயன்படுத்தலாம்
புதுடில்லி: மத்திய ஆசிய நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் இந்திய பயணியர், இனி அங்கும் யு.பி.ஐ., வாயிலாக பணம் செலுத்த முடியும்.
மத்திய ஆசிய மண்டலத்தை மையமாக கொண்டு செயல்படும் நிதி தொழில்நுட்ப கட்டமைப்பான 8பி., இந்தியாவின் இணையவழி பணபரிவர்த்தனை தளமான பே-யு உடன் செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்த வசதி கிடைத்துள்ளது.
கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் சுற்றியுள்ள நாடுகளில் செயல்பட்டு வரும் 8பி, அந்த பகுதிகளில் உள்ள தனது நிதி கட்டமைப்பை இந்தியாவின் யு.பி.ஐ., உள்ளிட்ட பண பரிவர்த்தனை முறைகளுடன் ஒருங்கிணைக்க உள்ளது. இதன் வாயிலாக, யு.பி.ஐ., டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், நெட் பேங்கிங் போன்றவற்றையும் பயன்படுத்தி அந்த நாடுகளில் இந்திய பயணியர் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.
@quote@ யு.பி.ஐ., போன்ற பழக்கப்பட்ட பணப்பரிமாற்ற முறைகள் வெளிநாடுகளில் கிடைப்பது, இந்திய பயணிகளின் நம்பிக்கையை அதிகரிக்கும். இது நம் நாட்டுக்கும் அந்த நாடுகளுக்கும் இடையேயான சுற்றுலா மற்றும் வர்த்தகத்துக்கு பெரும் பாலமாக அமையும். - ரோஹித் மகாஜன், நிறுவன தலைவர், புளூட்டோஸ் ஒன்quote
மேலும்
-
மேல்தள சுவர் இடிந்து விழுந்து சாலையில் சென்ற மூதாட்டி பலி :காரைக்காலில் பரபரப்பு
-
சுவற்றின் மீது பைக் மோதி வாலிபர் பலி
-
பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
-
இறந்த நபர்கள் யார் போலீசார் விசாரணை
-
கூலி தொழிலாளி மயங்கி விழுந்து பலி
-
நெய்வேலி மாற்றுக்கட்சியினர் தி.மு.க., வில் ஐக்கியம்