நெல் கொள்முதல் நிலையங்கள் ஆண்டு முழுதும் செயல்படும் அ.தி.மு.க., வேட்பாளர் சோமசுந்தரம்
காஞ்சிபுரம்: ''காஞ்சிபுரத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் ஆண்டு முழுதும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அ.தி.மு.க., வேட்பாளர் சோமசுந்தரம் வாக்குறுதி அளித்துள்ளார்.
காஞ்சிபுரம் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலருமான சோமசுந்தரம் போட்டியிடுகிறார்.
காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கம் பகுதியில், நேற்று கா லை நடைபயிற்சி மேற்கொள்பவர்களிடம் அ.தி.மு.க., வேட்பாளர் சோமசுந்தரம் ஓட்டு சேகரித்தார்.
தொடர்ந்து, காஞ்சிபுரம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தாமல், கிளார், பெரும்பாக்கம், முத்துவேடு, விஷார், நரப்பாக்கம், விப்பேடு, புத்தேரி, திருப்பருத்திகுன்றம், முசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
பின், விவசாய பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகளிடம் அவர் பேசியதாவது:
அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் விவசாயிகளின் நலன் கருதி, நெல் கொள்முதல் நிலையங்கள் ஆண்டு முழுதும் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
திருமண மேடையானது தேர்தல் பிரசார மேடை காட்டுமன்னார்கோவிலில் சுவாரசியம்
-
மதுரை அரசு மருத்துவமனையில் பாதுகாப்பிற்கு 'டபுள் கேட்': சுற்றிச் சுற்றி செல்லும் டாக்டர்கள், பணியாளர்கள்
-
பிரெஞ்ச் ஓபன்: பரிசு உயர்வு
-
உங்களில் ஒருவனாக இருக்கிறேன் :சபா ராஜேந்திரன் நெகிழ்ச்சி
-
பகலில் பற்றாக்குறை; இரவில் துண்டிப்பு: துாக்கம் தொலைத்த நாவினிபட்டி பொதுமக்கள்
-
மகளிர் உதவித்தொகை உயர்த்தப்படும்: அமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி