மகளிர் உதவித்தொகை உயர்த்தப்படும்: அமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி 

கடலுார்: தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.

கடலுார் அருகே உள்ள எம்.புதுார், சி.என்.,பாளையம், இடையர் குப்பம், பட்டீஸ்வரம், கொஞ்சிக்குப்பம், மழவாரநல்லுார், நடுவீரப்பட்டு , குமளங்குளம், வாண்டராசன்குப்பம், திருவந்திபுரம் பகுதியில் நேற்று அமைச்சர் பன்னீர் செல்வம் ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில் சொன்னதை எதையும் செய்யவில்லை. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வந்த பின்னர் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளார்.

மகளிர் உரிமைத்தொகை தற்போது வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத்தொகையை அதிகரிப்பதாக கூறியுள்ளார். அதை கண்டிப்பாக செய்து முடிப்பார்.

மக்களின் நம்பிக்கை பெற்ற முதல்வராக உள்ளார். மீண்டும் ஸ்டாலின் முதல்வராகவும், இந்த பகுதியில் என்னை தேர்ந்தெடுக்கவும், பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஒன்றிய செயலாளர் காசிராஜன், சுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன், தே.மு.தி.க., மாவட்ட அவைத் தலைவர் ராஜாராமன், திருமேனி, சுபாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement