பிரெஞ்ச் ஓபன்: பரிசு உயர்வு
பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடருக்கான பரிசுத்தொகை அதிகரிக்கப்பட்டது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், வரும் மே 24ல் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் துவங்குகிறது. பைனல், ஜூன் 7ல் நடக்கவுள்ளது. இதன் மொத்த பரிசுத்தொகை ரூ. 678 கோடியாக உயர்த்தப்பட்டது. இது, கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம்.
ஒற்றையர் பிரிவில் கோப்பை வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ. 31 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது. இரண்டாவது இடம் பிடிக்கும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ. 15 கோடி பரிசாக கிடைக்கும். அரையிறுதி வரை செல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ. 8 கோடி வழங்கப்படும். முதல் சுற்றில் தோல்வியடையும் வீரர், வீராங்கனைகள் தலா ரூ. 95 லட்சம் பரிசு பெறுவர்.
இரட்டையரில் (ஆண்கள்/பெண்கள்) கோப்பை வெல்லும் ஜோடிகளுக்கு தலா ரூ. 7 கோடியும், கலப்பு இரட்டையரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் ஜோடிக்கு ரூ. 1.35 கோடி பரிசாக கிடைக்கும்.
மேலும்
-
தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
-
மனைவியை கொன்ற கணவர் ஓட்டம் நியாயம் கேட்டு பெற்றோர் புகார்
-
இன்று இனிதாக... (19.04.2026) பெங்களூரு
-
பெங்களூரில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என வல்லுநர்கள் எச்சரிக்கை பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என வல்லுநர்கள் எச்சரிக்கை
-
டிராக்டர் கவிழ்ந்து இரண்டு பேர் பலி
-
திருச்சியில் இன்று விஜய் 'ரோடு ஷோ' கடலுாரில் 3வது முறையாக ரத்து