உங்களில் ஒருவனாக இருக்கிறேன் :சபா ராஜேந்திரன் நெகிழ்ச்சி

நெய்வேலி : மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, தி.மு.க.,வேட்பாளர் சபா ராஜேந்திரன் நேற்று நெய்வேலி தொகுதிக்கு உட்பட்ட விசூர், பேர்பெரியான்குப்பம், முத்தாண்டிக்குப்பம் ஆத்திரிகுப்பம், கருக்கை, செம்மேடு, மேலிருப்பு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

உங்களில் ஒருவனாக, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து வருகிறேன். தொகுதியின் வளர்ச்சிக்காக பாடுபடும் எனக்கு ஆதரவு தாருங்கள். கடந்த, 5 ஆண்டுகளில் தொகுதி கிராமங்களில் பல்வேறு நலத்திட்டம் மற்றும் மேம்பாட்டு பணிகளை செயல்படுத்தியுள்ளேன்.

தொகுதி முழுவதிலும் சாலை மேம்பாட்டு பணிகள், குடிநீர் வசதி, மின்சாரம், வேலைவாய்ப்பு, பெண்கள் நலன், விவசாயிகள் நலன், கல்வி மற்றும் சுகாதார திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். எனக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளித்தால், உங்கள் ஆதரவுடன் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று தொகுதியின் முழுமையான வளர்ச்சிக்கு உழைப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், தி.மு.க, மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பல கிராமங்களில் பைக்கில், ஊர்வலமாக சென்று சபா ராஜேந்திரன் மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தனர்.

Advertisement