மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க பிரதமர் மோடி வேண்டுகோள்
புதுடில்லி: 'மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாடு முழுதும் அமல்படுத்த வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. வரும் 2029ல் நடக்கும் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்கள், மகளிர்
இடஒதுக்கீடு நடைமுறையுடன் நடக்க வேண்டும் என்பது மிகவும் அவசியமானது. எனவே, இந்த சட்டத் திருத்தத்துக்கு கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஆதரிக்க வேண்டும்.
இதற்காக நடக்கும் பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தில், எம்.பி.,க்கள் தவறாமல் பங்கேற்க
வேண்டும்' என, லோக்சபா மற்றும் ராஜ்யசபா கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.
பார்லிமென்ட் மற்றும் மாநில சட்டசபைகளில், மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க, 2023 செப்டம்பரில் மத்திய பா.ஜ., அரசு சட்டம் இயற்றியது. மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்து, அதன்பின் தொகுதி மறுவரையறை செய்த பின்னரே, இந்த இடஒதுக்கீடு அமலுக்கு வரும்
என்றும் கூறப்பட்டது.
இதனால், இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வரவில்லை. தற்போதைய நிலவரப்படி, 2027ல் தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவடையும். எனவே, 2029 லோக்சபா தேர்தலுக்குள் இதை அமல்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதையடுத்து, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கேற்றபடி மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் கொண்டு
வரப்பட உள்ளது.
கடிதம்
இதற்காக, வரும் 16 முதல் 18ம் தேதி வரை பார்லிமென்டின் சிறப்பு கூட்டத்தொடர் நடக்கிறது. இதையொட்டி, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:
மகளிருக்கு முன்னேற வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்போது தான் சமூகத்திலும் முன்னேற்றம் ஏற்படும். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் தொலைநோக்கு அரசியல் பயணத்தில், பெண்களின் பங்களிப்பும் அவசியம் தேவை. மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை, நாடு முழுதும் அமல்படுத்த வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. வரும் 2029ல் நடக்கும் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்கள், மகளிர் இடஒதுக்கீடு நடைமுறையுடன் நடக்க வேண்டும் என்பது மிகவும் அவசியமானது.
வரும் 2029ல் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம், ஜனநாயக
அமைப்புகளுக்கு புதிய ஆற்றல் பாயும்; பொது மக்களின் நம்பிக்கை வலுப்பெறும். நிர்வாக
ஆட்சியில் மகளிருக்கு அதிக அளவில் பிரதிநிதித்துவமும், பங்களிப்பும் கிடைப்பது
உறுதியாகும்.
பங்கேற்க வேண்டும்
எனவே, பார்லி.,யில் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரும் போது, எம்.பி.,க்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து ஒரே குரலாய் ஒலிக்க வேண்டும். எம்.பி.,க்கள் அனைவரும் பார்லி., சிறப்பு கூட்டத்தில் தவறாமல் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு கடிதத்தில்
கூறியுள்ளார்.
இதற்கிடையே, மகளிர் இடஒதுக்கீடு திருத்தச் சட்டம் குறித்து பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: விண்வெளி முதல் விளையாட்டு வரை; ஆயுதப் படைகள் முதல் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரை, ஒவ்வொரு துறையிலும் மகளிர் பங்கெடுத்து, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மூலம் தங்களது திறன்களை மகளிர் நிரூபித்து கொண்டேவருகின்றனர்.
பார்லி.,யில், 2023ல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்ட தருணத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. நம் நாட்டின் பெண்கள் நலனுக்காக எடுக்கப்பட்ட ஒரு
முக்கியமான முடிவுக்கு, கட்சி பாகுபாடு இல்லாமல், அனைவரும் ஒற்றுமையுடன் ஆதரவு அளித்ததை இந்த உலகமே கண்டு வியந்தது.
அப்படி ஒரு தருணம் மீண்டும் நிகழ வேண்டும். பார்லி.,யில் இந்த வரலாற்று சிறப்புமிக்க
நிகழ்வுக்காக, அனைவரும் ஒற்றுமையுடன் அணி சேருவர் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
@block_Y@'அரசியல் ஆதாயமே காரணம்'
''தொகுதி மறுவரையறை தொடர்பான விபரங்களை வெளியிடாமல், மகளிர் இடஒதுக்கீடு சட்டம் குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதம் நடத்துவது என்பது சாத்தியமற்றது,'' என, காங்., தேசிய தலைவர்மல்லிகார்ஜுன கார்கேதெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ''தொகுதி மறுவரையறை மற்றும் அது சார்ந்த விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.
ஐந்து மாநில தேர்தல்கள் முடிந்த பின், அதாவது ஏப்., 29க்கு பின் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, இது குறித்து விவாதிக்க வேண்டியது அவசியம். ''அரசியல் ஆதாயத்துக்காகவே ஐந்து மாநில தேர்தல் நடக்கும் சமயத்தில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற, பார்லி.,யின் சிறப்பு கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது,'' என்றார். block_Y
@block_B@'வஞ்சகமான உள்நோக்கம்'
திரிணமுல் காங்., மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான டெரக் ஓ பிரையன் கூறியுள்ளதாவது: தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. அதில், வெற்றி பெறவே இப்படியொரு நாடகம் அரங்கேற்றப்படுகிறது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். பார்லி., ஒன்றும் குஜராத் ஜிம்கானா கிளப் அல்ல; நினைத்த போதெல்லாம் கூட்டுவதற்கு. நாட்டு மக்களையும், பார்லி.,யையும் கேலி செய்வதை நிறுத்துங்கள். உங்கள் இருவரின் உள்நோக்கமும் வஞ்சகம் நிறைந்தது.இவ்வாறு அவர் கூறியுள்ளார். block_B
@block_G@273 இடங்கள் கிடைக்கும்!
பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடரில் இந்த திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், லோக்சபாவில் எம்.பி.,க்களின் 'சீட்' எண்ணிக்கை 816 ஆக உயரும். அதில் 273 இடங்கள், 33 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ்மகளிருக்கு ஒதுக்கப்படும்.block_G
மூன்றாம் பாலினத்தவர்கள் பலர் சாதனைகள் புரிந்திருக்கிறார்கள் இவர்களுக்கும் இட ஒதுக்கீடு செய்தால் நன்று.
மக்களிர் இடஒதுக்கீடு வந்தால் தேர்தல் செலவு குறைய நல்ல வாய்பு இருக்கிறது. இதனால் சாதாரனவர்கள் கூட தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளது.
துவக்கத்திலிருந்து முலாயம் அகிலேஷ் யாதவ், லாலுவெல்லாம் மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள். இதெல்லாம் தெரிந்தே சோனியா அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார். பாலின சமத்துவம் ன்னு பேசும் திமுக 77 ஆண்டுகளில் ஒரு பெண்ணை தலைவராக ஏற்றதில்லை. எந்த இஸ்லாமிய கட்சியும் ஏற்காது. நாட்டின் மக்கள் எண்ணிக்கையில் பெண்களே அதிகம் எனும் போது இந்த சட்டத்தை இனியும் தள்ளிப்போடக்கூடாது.
எல்லா மாநிலத்துக்கும் 35% அதிகப்படுத்திவிடவேண்டும், ஒரு மாநிலத்துக்கு ஒரு ஓட்டு. தமிழ்நாட்டில் ஒரு ஓட்டின் மதிப்பு 39 சீட்டுகளாகவும், உபியில் ஒரு ஓட்டுக்கு 80 சீட்டுகள் என்றும் இருக்கவேண்டும்,
அனைத்து மாநிலங்களும் சமமாக இருக்க வேண்டும். அல்லது யார் அதிகம் வரி செலுத்துகிறார்களோ அவர்களுக்கு அதற்க்குத் தகுந்த பிரதிநிதித்துவம்.
நாட்டில் தீர்க்க வேண்டிய அவசரமான பல பிரச்சனைகள் இருக்குறது.
இருக்கட்டும் .. இதுவோ முக்கியம்
முன்ன ரே முன் மொழி செய்திருந்தால் நல்லது, மாநிலங்கள் தேர்தல் சமயம் சரியில்லை
ராஜிவ் பஞ்சாயத்து ராஜ் திட்டத்தில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார். ஒரு பெண்ணான சோனியா கையில் 15 ஆண்டு ஆட்சி இருந்தும் அதே ஒதுக்கீட்டை எம்பி எம்எல்ஏ தேர்தல்களில் கொண்டு வர மறுத்தார். இப்போ எதிர்ப்பது நாடகம்.
தொகுதி மறுசீரமைப்பு செய்யவெல்லாம் மெனக்கெட தேவை இல்லை. இருக்கிற மக்களவைத் தொகுதிகளில் இரண்டு தொகுதிகளை ஒருங்கிணைத்து புதிதாக ஒரு தொகுதி ஏற்படுத்த வேண்டியது தான். ஒரு மாநிலத்திற்குள் இரண்டு அடங்கவில்லை என்றால் மிஞ்சும் தொகுதிகளில் மூன்றை ஒருங்கிணைப்பு செய்யலாம்.
ஒரே தொகுதி கொண்ட இரண்டு மாநிலங்களை இணைத்து ஒரு மகளிர் பிரதிநிதியை தேர்ந்தெடுக்கலாம்.
மகளிர் பிரதிநிகளை மகளிர் மட்டுமே கட்சி சார்பில்லாமல் தேர்ந்தெடுக்க செய்யலாம். ஆட்சி அமைக்க உரிமை கோர பொது தொகுதி உறுப்பினர்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.
மசோதாக்களை மகளிரையும் உள்ளடக்கிய சபையில் நிறைவேற்றலாம். மகளிரைப் பாதிக்கும் மசோதாக்களை மகளிர் தொகுதி உறுப்பினர்களின் பெரும்பான்மை கொண்டு ரத்து செய்ய வகை செய்யலாம்.
எல்லாம் எலக்ஷனுக்கு அப்புறம் பாத்துக்கலாம். ஒண்ணும் குடிமுழுகிடாது.
வீட்ல சோறு போடமாடாங்க... ஓகே வா
சோனியா, கருணா, மமதை அனைவரும் வாய் கிழிய பெண்கள் முன்னேற்றம் பற்றி பேசுவார்கள். ஆனால் முன்பு வாஜ்பாய் கொண்டு வந்த தீர்மானத்தை ஆணவத்துடன் எதிர்த்து ஓட்டு அளித்து தீர்மானத்தை தோற்கடித்தனர்
தோற்கும் என்று தெரிந்தே தான் கொண்டு வந்தார்கள். இப்போது உறுப்பினர் எண்ணிக்கையை கூட்டுவதால் தங்களுக்கு பாதிப்பு இல்லை என்று எல்லோரும் சத்தம் இல்லாமல் ஆதரிக்கக் கூடும்.மேலும்
-
தி.மு.க., ஆதரவு போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்ற பட்டியல் தயாரிப்பு
-
பறக்கும் படையிடம் இதுவரை சிக்கியது... ரூ . 5.97 கோடி! 5.06 கோடி ரூபாய் திருப்பி ஒப்படைப்பு
-
ரயிலில் கஞ்சா கடத்தியவர் சிக்கினார்
-
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
-
ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.62 ஆயிரம் பறிமுதல்
-
ஓசூர் டவுனில் பலவீனமாக அ.தி.மு.க., மாஜி அமைச்சர் மெத்தனம்; கட்சியினர் புலம்பல்