ஓசூர் டவுனில் பலவீனமாக அ.தி.மு.க., மாஜி அமைச்சர் மெத்தனம்; கட்சியினர் புலம்பல்

ஓசூர்: ஓசூர் டவுன் பகுதியில், அ.தி.மு.க., பலவீனமாக உள்ள நிலையில், குருட்டு நம்பிக்கையில் வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில், மாஜி அமைச்சர் உள்ளதாக, கட்சியினர் புலம்பி வருகின்றனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, தி.மு.க.,வில் சத்யா களமி-றங்கி உள்ளார். இவரில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை கணிக்கக்கூட முடியாத அளவிற்கு, தேர்தல் கள நிலவரம் உள்-ளது. தேர்தல் பிரசாரத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில், தீவிரம் காட்டினால் தான், கூடுதல் ஓட்டுகளை அறுவடை செய்து வெற்றி பெற முடியும். நேற்று முன்தினம், தமிழ் புத்தாண்டையொட்டி பொது விடு-முறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால், ஓசூரில் தொழிலா-ளர்கள், பெண்கள் மற்றும் மாணவ, மாணவியர் அனைவரும் வீட்டில் இருந்தனர். இந்த நேரத்தில் மக்களிடம் நேரடியாக சென்றால், கூடுதல் ஓட்டுகளை அறுவடை செய்யலாம் என்பதை உணர்ந்து, தி.மு.க., வேட்பாளர் சத்யா தேர்தல் பிரசாரம் செய்தார். ஆனால், அ.தி.மு.க., வேட்பாளர் பாலகிருஷ்ணா-ரெட்டி, நேற்று மாலை வரை, தேர்தல் பிரசாரத்திற்கு செல்-லாமல், தேர்தல் அலுவலகத்திலேயே இருந்தார். மாலையில் தான் பிரசார இடங்களுக்கு சென்றார்.
அதேபோல், கவுடா, நாயுடு சமூகத்தினர், ஓட்டு தனக்கு கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் பாலகிருஷ்ணாரெட்டி தரப்பு உள்ளது. அ.தி.மு.க.,வில் உள்ள கவுடா, நாயுடு சமூக ஓட்-டுகள் அவருக்கு கிடைக்கலாம். ஆனால், தி.மு.க.,வில் உள்ள உட்கட்சி பிரச்னையால், நாயுடு, கவுடா ஓட்டுகளும் தன் பக்கம் வரும் என, பாலகிருஷ்ணாரெட்டி குருட்டு நம்பிக்கையில் உள்ளார்.
வரும், 19ம் தேதி முதல்வர் ஸ்டாலின், ஓசூர் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். அதனால், அதிருப்தியிலுள்ள கவுடா, நாயுடு சமூகத்தினர், ஸ்டாலின் பிரசாரத்தால் ஒன்றிணைய அதிக வாய்ப்புள்ளது.
இது குறித்து, அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:
ஓசூர் நகரில், 2.20 லட்சம் ஓட்டுகள் வரை உள்ளன. இங்கு முன்-னிலை பெறும் கட்சி தான், வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஓசூர் பழைய நகராட்சியில் மொத்தமிருந்த, 30 வார்டுகள், அ.தி.மு.க.,விற்கு பலவீனமாக உள்ளன. அதேபோல், கிராமப்பு-றங்களில், பாகலுார், பேரிகை, தொரப்பள்ளி, அச்செட்டிப்பள்ளி, பத்தலப்பள்ளி, கொல்லப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் பலவீனமாக உள்ளன. பூத் வாரியாக பாலகிருஷ்ணாரெட்டி தரப்பு, 2,000 முதல், 5,000 ரூபாய் வழங்கி உள்ளனர். அது போதிய அளவில் இல்லை. வீடு, வீடாக அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை துண்டு பிரசுரங்களை வழங்குபவர்
களுக்கு கூட, பணம் வழங்க முடியவில்லை. ஒரு இடத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஆட்களை திரட்ட, பட்டாசு வெடிக்க போன்ற செலவுகளுக்கு, 10,000 வழங்குகின்றனர். இந்த பணம் போதாது. பாலகிருஷ்ணாரெட்டி பணத்தை எடுக்க தயங்குகிறார். இப்படியே சென்றால், கட்சி நிர்வாகிகளை ஒன்றிணைத்து செயல்-பட வைப்பது, சிரமமாகி விடும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement