ரயிலில் கஞ்சா கடத்தியவர் சிக்கினார்

ஜோலார்பேட்டை: ஒடிசாவிலிருந்து, பெங்களூருவுக்கு ரயிலில் கடத்திய, 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.


திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தம் பகுதியில், ஜோலார்பேட்டை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த, வடமாநில நபரை பிடித்து சோதனை செய்ததில், அவர், 2 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. விசாரணையில் அவர், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜித்தேந்தர் மாஜித், 31, என்பதும், அவர் ஒடிசா மாநிலத்திலிருந்து, பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், பொதுஜன பெட்டியில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது. ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், ஆம்பூர் முதல் ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் வரை சோதனை செய்ததால், இதற்கு பயந்த ஜித்தேந்தர் மாஜித், ரயில் ஜோலார்பேட்டை ஸ்டேஷன் வந்ததும் இறங்கி, அங்கிருந்து ஜங்ஷன் பஸ் நிறுத்தம் சென்று, பஸ் மூலம் செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவர் வைத்திருந்த, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement