சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
கிருஷ்ணகிரி: பிரதோஷத்தையொட்டி, சிவன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, கிருஷ்ணகிரி பழையபேட்டை கவீஸ்வரன் கோவில் அருகிலுள்ள சோமேஸ்-வரர் கோவில் மற்றும் புதுப்பேட்டை சந்திர மவுலீஸ்வரர் கோவிலில், நந்திக்கு அபிஷேகம் செய்து, அருகம்புல் மாலை அணிவித்தனர். தொடர்ந்து, சிவலிங்கத்துக்கு, பால், தயிர், தேன், கரும்புசாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, வில்வ இலை, வெள்ளை தாமரை, மல்லிகை போன்ற மலர்களால் அலங்காரம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல், மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷ வழிபாடுகள் நடந்தன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆட்சி மாறினால் காட்சியும் மாறும்; அதிகாரிகளுக்கு இபிஎஸ் எச்சரிக்கை
-
முதல்வர் ஸ்டாலின் மீது ஒரே ஒரு குற்றச்சாட்டு: பிரேமலதா பேச்சால் திமுகவினர் அதிர்ச்சி
-
இளைஞர்களைக் கவர பிள்ளைகளை பிரசாரத்தில் இறக்கும் வேட்பாளர்கள்: அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் ‛‛ரெடி''
-
குடும்ப அரசியல் வீழ 2026 தேர்தல் முடிவு முக்கியம்: அண்ணாமலை
-
பார்லியில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்; நாளை மாலை 4 மணிக்கு ஓட்டெடுப்பு
-
சென்னையில் ரூ.245 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்; பறக்கும் படை நடவடிக்கை
Advertisement
Advertisement