இல்லாததை பேச வேண்டிய அவசியமில்லை: முதல்வர் ஸ்டாலின் பதில்
சென்னை: நெல்லுக்கு தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகையை நிறுத்த தங்கள் அமைச்சகம் அனுப்பிய கடிதம் குறித்து நான் தான் பேசினேன்; இல்லாததை பேச வேண்டிய அவசியமில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
தஞ்சையில் நடந்த பிரசார கூட்டத்தில், 'நெல்லுக்கு அளித்து வரும் ஊக்கத்தொகையை நிறுத்துமாறு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இதை மறுத்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 'குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் ஊக்கத் தொகை அல்லது போனஸ் அறிவிப்பது என்பது, எப்போதும் மாநில அரசுகளின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது.
அதை யாரும் பறிக்கவில்லை' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, பதில் அளித்தார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: "நெல்லுக்குத் தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகையால் விளைச்சல் பெருகிக் கொண்டே போகிறது. எனவே, இந்த ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும்" எனத் தமிழக அரசு தலைமைச் செயலாளருக்குத் தங்களின் அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் மிகத் தெளிவாகவே உள்ளது.
கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. அப்படி, பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தற்போது மாநில அரசால் தரப்படும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்யுமாறும், நெல்லுக்கு இத்தகைய ஊக்கத்தொகை வழங்குவதை நிறுவத்துவது தொடர்பாகப் பரிசீலனை செய்யவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.
தங்களுடைய இந்தப் பதிவில், "குறைந்தபட்ச ஆதார விலையைத் தாண்டி ஊக்கத்தொகை வழங்குவது மாநில அரசின் முடிவு எனவும், அதனை யாரும் பறிக்கவில்லை" என்றும் கூறியிருக்கிறீர்கள். தங்களது கூற்று உண்மைதானென்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா? இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (60)
Duruvesan, தர்மபுரி பாட்டாளி - Dharmapuri,இந்தியா
13 ஏப்,2026 - 18:36 Report Abuse
இருந்தால் பேசுவோம், இல்லாததை ஏன்டா கேட்கறீங்க 0
0
Reply
பச்சையப்பன் கோபல்புரம். - ,
13 ஏப்,2026 - 17:55 Report Abuse
செம அடி! இல்லாததை பேச வேண்டிய அவசியம் உதய்ணாவின் தந்தைக்கும் இல்லை இளம் பெரியார் இன்பாண்ணாவின் தாத்தாவுகும் இல்லை.இந்த பொய் புனை சுருட்டெல்லாம் கைபர் கணவாய்க்கு அந்தப் பக்கம் இருந்து வந்ததாக்கும். எளிக்கி அண்டா வர்லே!!. 0
0
Duruvesan, தர்மபுரி பாட்டாளி - Dharmapuri,இந்தியா
13 ஏப்,2026 - 18:35Report Abuse
எனிக்கி அண்டா கிட்டில்லே சாரே 0
0
Reply
MAHADEVAN NATARAJAN - ,
13 ஏப்,2026 - 17:30 Report Abuse
திமுக மற்றும் திரும்ப வருமானால் தமிழகம் சுடுகாடு ஆகிவிடும். மானமுள்ள இந்துக்கள் யோசனையுடன் ஓட்டளிக்க வேண்டும் 0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
13 ஏப்,2026 - 17:01 Report Abuse
இல்லாததை பேச வேண்டிய அவசியமில்லை: முதல்வர் ஸ்டாலின் பதில்??? 0
0
Reply
kumar c - bangalore,இந்தியா
13 ஏப்,2026 - 15:01 Report Abuse
அனுப்புனர்,பெறுநர் இரண்டு பேரிடமும் ஒரு நகல் இருக்குமே,அப்புறம் எப்படி? மாட்டுற வரை ஆடுவோம் அப்புறம் நீட் விலக்கு மாதிரி கண்டுக்காம ஓடிடுவோம். 0
0
பச்சையப்பன் கோபால் புரம் - ,
13 ஏப்,2026 - 17:57Report Abuse
நகல் இல்லாட்டியும் நக்கல் இருக்குமே??.தமிழ்நாடு வெல்லட்டும் தள்ளபதி செழிக்கட்டும். 0
0
Reply
aru - ,இந்தியா
13 ஏப்,2026 - 14:41 Report Abuse
தீயசக்தி கூட்டம் வடிகட்டிய மண்டூகள், பொய்களின் கூடரத்தில் வாழும் அப்பா பொய், மகன் பொய், பேரன் பொய்......அடுத்தவர்கள் மீது பழி போட்டு போட்டு எத்தனை காலம் ஏமாற்றுவார்கள்...மக்கள் எத்தனை காலம் ஏமாறுவார்கள்... 0
0
Reply
Kumar Kumzi - ,இந்தியா
13 ஏப்,2026 - 14:12 Report Abuse
பொய் சொல்லுவதற்கு துண்டுசீட்டு சாருக்கு சொல்லியா தர வேண்டும் பொய்யிலேயே உருவான உடம்பாச்சே 0
0
Reply
உண்மை கசக்கும் - Chennai,இந்தியா
13 ஏப்,2026 - 13:47 Report Abuse
இதோ நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடிததை வெளியிட்டு விட்டார். இப்போ என்ன போய் சொல்ல போறீங்க 0
0
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
13 ஏப்,2026 - 14:10Report Abuse
பென் கம்பெனி யிலிருந்து சரியான பொய்க்கு பொய் ரிப்போர்ட்டை ஏ ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தயார் செய்து கொடுப்பார்கள். கிடைத்தவுடன் வெளியிடுவோம். வெயிட் அண்ட் ஸீ. 0
0
Reply
Rengaraj - Madurai,இந்தியா
13 ஏப்,2026 - 13:42 Report Abuse
கடிதத்தில் இடையில் இருக்கும் ரெண்டு வரிகளை மட்டும் படித்து அதை தவறாக பொருள்கொண்டால் முதல்வரை என்னவென்று சொல்வது. ?? நீங்கள் கூறுவது உண்மை என்றால் மத்திய அரசின் கடித்ததை வந்த ஜனவரி 9 அன்றே வெளியிட்டுருக்கலாமே அல்லது இப்போது வெளியிடவேண்டியதுதானே என்ன தயக்கம் ஸ்டாலின் அவர்களே ? 0
0
Reply
சந்திரன் - ,
13 ஏப்,2026 - 13:17 Report Abuse
எல்லாம் சரியாகும். 0
0
Reply
மேலும் 47 கருத்துக்கள்...
மேலும்
-
கேபிள் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஜனநாயகன்: ரசிகர்கள் அதிர்ச்சி
-
மேல்தள சுவர் இடிந்து விழுந்து சாலையில் சென்ற மூதாட்டி பலி :காரைக்காலில் பரபரப்பு
-
சுவற்றின் மீது பைக் மோதி வாலிபர் பலி
-
பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
-
இறந்த நபர்கள் யார் போலீசார் விசாரணை
-
கூலி தொழிலாளி மயங்கி விழுந்து பலி
Advertisement
Advertisement