எடப்பாடியில் சுயேச்சைக்கு ஆதரவு: கடைசி நேரத்தில் விஜய் திடீர் முடிவு
நமது நிருபர்
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் களம் காணும் சுயேட்சை வேட்பாளர் பிரேம்குமாருக்கு ஆதரவு அளிப்பதாக விஜய் அறிவித்துள்ளார்.
எடப்பாடி சட்டசபை தொகுதியில் தவெக வேட்பாளராக அருண்குமார் அறிவிக்கப்பட்டார். அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் முன்மொழிந்தவர்களை உறுதி செய்ய முடியாத காரணத்தால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
அருண்குமார் கடத்தப்பட்டுவிட்டதாகவும் சர்ச்சை எழுந்தது. ''எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் துரோகம் செய்துவிட்டதாகவும், அவர் கருப்புஆடு என்றும் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா விமர்சித்து இருந்தார். எடப்பாடி தொகுதியில் தவெக போட்டியிடாத சூழ்நிலை உருவானது.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் இன்று சுயேட்சை வேட்பாளர் பிரேம்குமாருக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என் நெஞ்சில் குடியிருக்கும் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டசபை தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
எடப்பாடி சட்டசபை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் பிரேம்குமார் முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான். நம்முடைய சகோதரர்தான். எனவே, தற்போதைய சட்டசபை தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நமது முன்னாள் நிர்வாகியான பிரேம்குமாரையும், அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தையும் நமது தமிழக வெற்றிக் கழகம் ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது முழு ஆதரவுடன் களம் காணும் நம் சகோதரர் பிரேம்குமாரை, மனத்தளவில் நம்முடைய வேட்பாளராகக் கருதி, அவருக்குத் தேர்தல் கமிஷனால் அளிக்கப்பட்டுள்ள வரிசை எண் 12ல் தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டுகிறேன்.
நம் குடும்பத்தைச் சேர்ந்த அவரைப் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கட்சி நிர்வாகிகளையும், எடப்பாடி தொகுதி மக்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை முடக்கி, குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்குச் சரியான பாடத்தைப் புகட்டும் விதத்தில் இவரது வெற்றி அமையட்டும். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (28)
M Ramachandran - Chennai,இந்தியா
19 ஏப்,2026 - 17:06 Report Abuse
என்ன சோதனை. கைய்ய காசு செலவு செய்யணும் போல. கட்சி பணம் தான் யிருக்கே எடுத்து விட. பொறுத்திருந்து பார்ப்போம். 0
0
Reply
PATTALI - chennai,இந்தியா
19 ஏப்,2026 - 14:41 Report Abuse
இதே போல்தான் ஒருதேர்தலில் புவனகிரி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டு, ஜெயலலிதா அவர்கள் ஒரு சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்தார்.
அந்த சுயேட்சை வேட்பாளர் வெற்றிபெற்று அ.தி.மு.க வில் இணைந்தார். அந்த தேர்தலில் அ.தி.மு.க அமோகமாக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. இப்போது அதே போல் விஜய்யின் த.வெ.க விற்கு நிகழ்ந்துள்ளது, என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம். 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
19 ஏப்,2026 - 12:50 Report Abuse
நாட்டு பற்று மிக்க படித்தவனுக்கு பின்னால் ஓடும் கூட்டத்தை தமிழ்நாட்டில் பார்க்க முடியவில்லை. சினிமா கவர்ச்சிக்கு பின்னால் இள வயதினர் அவன் வண்டிக்கு பின்னால் போயி உயிரை விடுவது மிக கேவலமாக இருக்கிறது. இது என்ன புதிய மாடல் என்பது தெரியவில்லை. 0
0
SULLAN - chennai,இந்தியா
19 ஏப்,2026 - 16:44Report Abuse
என்றாவது நீங்கள் சொல்கின்ற நபரின் உடல் மொழி மற்றும் பேச்சு வழக்கை நடுநிலையாக பரி சோதித்து இருக்குறீர்களா ?? மிக கேவலமான சிந்தனை கொண்ட நபரை போல செயல்படும் இவர் படித்ததால் ஆன பயன்தான் என்ன?? தமிழக வாக்காளர்கள் புத்தி சாலிகள் என்பதை நான்காம் தேதி அறிவாய் ரத்தினமே ? 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
19 ஏப்,2026 - 12:12 Report Abuse
திமுகவுக்கு பூஜ்ஜியம் அதிமுகவுக்கு ராஜ்ஜியம்: பழனிசாமி 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
19 ஏப்,2026 - 12:04 Report Abuse
அந்த சுயஏட்சிய் கடைய்யசியில் தொப்பைய்ய பழனியிடம் சரண்டெர். 0
0
Reply
VSMani - ,இந்தியா
19 ஏப்,2026 - 11:54 Report Abuse
நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? 0
0
Field Marshal - Redmond,இந்தியா
19 ஏப்,2026 - 13:30Report Abuse
சைபால் மற்றும் ஜாலிம் லோஷன் தான் படைக்கு சரிப்பட்டு வரும் 0
0
Reply
Barathi - ,
19 ஏப்,2026 - 11:46 Report Abuse
ஆக மொத்ததுல ஓட்டை பிரிச்சி ஜெயிக்க வைக்கணும். பிரதிபலனாக ரெண்டு மாசத்துல உதவா நிதி தயாரிக்கிற படத்துக்கு 500 கோடிக்கு ஆபர் கிடைக்கும் 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
19 ஏப்,2026 - 11:37 Report Abuse
இந்த ஆளையும் நம்பி சின்னம் வி கு தா காட்சியிலும் நப்பாசையால் சேர்ந்து சொந்த பணத்தையும் செலவழித்து சொந்தங்களின் கேலிக்கு ஆளாகி பயித்திய காரன் பட்டம் வாங்கி நடுத்தெருவுக்கு வந்து நிற்க போகிறார்கள். 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
19 ஏப்,2026 - 11:32 Report Abuse
டைரக்டர் சி.சுந்தர் மற்றும் வடிவேலு காம்பினேஷன் நகைச்சுவை தான் ஞ்யாபகம் வருது. வெளியில் தான் ஸ்டாராங். அடி மட்டத்தில் வீக்குப்பா. 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
19 ஏப்,2026 - 11:29 Report Abuse
கூர் கெட்ட குப்பன். 0
0
Reply
மேலும் 16 கருத்துக்கள்...
மேலும்
-
கோடை வெயிலின் தாக்கம்: 20 வயது வாலிபர் பலி
-
வக்கீலை செருப்பால் அடித்த பெண் இன்ஸ்., மீது வழக்கு பதிய உத்தரவு
-
மஹா., போக்குவரத்து அதிகாரிக்கு மிரட்டல்
-
பந்துக்குள் கஞ்சா, மொபைல் போன் சிறைக்குள் வீசப்பட்டதால் பரபரப்பு
-
'பயோ காஸ்' உற்பத்தியில் ரூ.120 கோடி வருவாய் பெங்களூரு குடிநீர் வழங்கல் வாரியம் திட்டம்
-
'அறிவை பட்டை தீட்டும் பட்டறையாக உருவெடுக்கும்' கடல் தாமரை புத்தக பூங்கா குறித்து சாந்தி புகழாரம்
Advertisement
Advertisement