இலங்கை அதிபருடன் துணை ஜனாதிபதி சிபிஆர் சந்திப்பு
கொழும்பு: அரசு முறை பயணமாக இலங்கை சென்ற துணை ஜனாதிபதி சிபிஆர், அந்நாட்டு அதிபர் அனுரா திசநாயகா மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரியாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக, இன்று (ஏப்ரல் 19) இலங்கைக்கு சென்றார். அவருக்கு கொழும்பு விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு சிபி ராதாகிருஷ்ணன் மேற்கொண்டுள்ள முதல் இலங்கை பயணம் இதுவாகும்.








மத்திய அரசின் உதவியுடன் இலங்கைத் தமிழ் சமூகத்தினருக்காக புதிதாக வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூன்றாம் கட்ட பயனாளிகளுக்கான வீடுகளை ஒப்படைக்க உள்ளார். நாளை நுவரேலியாவுக்கு செல்லும் அவர், மத்திய அரசு உதவியுடன் அங்கு கட்டப்படும் வீடுகளை பார்வையிடுகிறார். அங்குள்ள தமிழ் சமூகத்துடன் கலந்துரையாட உள்ளார்.
துணை ஜனாதிபதி வருகை முன்னிட்டு, தங்கள் நாட்டு சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை அரசு விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (6)
Josephmegallan - Sembawang,இந்தியா
19 ஏப்,2026 - 12:39 Report Abuse
தேர்தலுக்கு நான்கு நாட்கள் முன்பாக இப்படி இலங்கைக்கு பயணம் செய்வது அரசு முறை பயணமா அல்லது தமிழ் நாடு தேர்தல் கருத்தில் கொண்டு இப்படி செல்வதா .... எப்படியோ தமிழ் மக்களுக்கு நல்லது நடந்தால் நல்லதது தான் 0
0
Reply
Iyer - Karjat,இந்தியா
19 ஏப்,2026 - 12:14 Report Abuse
நல்ல பயணம் தான். இலங்கையுடன் நல்லுறவு வேண்டும். CPR வெற்றியுடன் செயல்படுத்துவார்.
மீனவ பிரச்னைக்கும் நல்ல தீர்வு காண்பார். 0
0
Reply
Sun - ,
19 ஏப்,2026 - 11:57 Report Abuse
தான் சார்ந்த கட்சியின் மீதான முழுவிசுவாசம், நம்பிக்கை, உழைப்பு, பொறுமை சி.பி.ஆரை இந்த அளவுக்கு உயர்த்தி உள்ளது. தமிழரான இவரை தோற்கடிக்க முழு முயற்சி எடுத்த தி.மு.கவின் தலைமை குடும்பம் தாங்கள்தான் ஏதோ தமிழை, தமிழ்நாட்டை மொத்தக் குத்தகைக்கு எடுத்துள்ளது போல் எப்போதும் பேசிவருகிறார்கள். 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
19 ஏப்,2026 - 11:47 Report Abuse
அடிக்கடி ஏற்படும் இந்திய மீனவர்கள் பிரச்சினை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லையே... போனதுதான் போனார், இலங்கை அதிபர் மற்றும் பிரதமருடன் அந்த சிந்துபாத் தொடர்கதை போன்ற நம் இந்திய மீனவர் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர முடிவு காணலாமே... 0
0
vadivelu - thenkaasi,இந்தியா
19 ஏப்,2026 - 13:17Report Abuse
That our great TN leaders will take care 0
0
செந்தில் பவானிசாகர் - ,
19 ஏப்,2026 - 18:36Report Abuse
எப்படியாவது இந்தியாவில் உள்ள தொப்புள் கொடி உறவை சொந்த நாட்டுக்கு அனுப்புங்க இங்க இவனுங்க தொல்லை தாங்க முடியலை. 0
0
Reply
மேலும்
-
போதை இளைஞர்களை நல்வழிப்படுத்த வாய் திறக்காத விஜய்: பதறும் பெற்றோரின் பரிதவிக்கும் கேள்வி!!
-
தமிழகத்தில் இதுவரை ரூ.1262 கோடி பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல்
-
ஓட்டுப்போட வந்த 3 பேர் பலி; ஓசூர் அருகே கோர விபத்து
-
திருவண்ணாமலையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
-
தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது
-
பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: பிரதமர் மோடி
Advertisement
Advertisement