வெற்று விளம்பர மாடல் ஆட்சி அவ்வளவுதான்; விஜய் காட்டம்
சென்னை: விசில் புரட்சியால் வெற்று விளம்பர மாடல் ஆட்சி அவ்வளவுதான் என்று தவெக தலைவர் விஜய் கூறி உள்ளார்.
இது குறித்து அவரது அறிக்கை;
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, சகோதரி ஒருவரது வீட்டின் சுவரில் அவரது அனுமதியின்றித் தங்களது கட்சி ஸ்டிக்கரைச் சிலர் ஒட்டியுள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த, கைக்குழந்தையுடன் உள்ள இன்னொரு சகோதரியையும் அவரது வீட்டில் இருந்தவர்களையும் சம்பந்தப்பட்டவர்கள் தாக்கியதாகவும் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் சமூக வலைத்தளங்களில் காணொளி பரவி வருகிறது. மகளிர் மீதான இத்தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி, வீட்டுச் சுவரில் ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது என்ற நிபந்தனை உள்ளது. அதை மீறியதோடு, தட்டிக் கேட்ட உரிமையாளரைத் தாக்கியுள்ளனர். இந்த அடாத செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விசில் புரட்சியால் வெற்று விளம்பர மாடல் ஆட்சி அவ்வளவுதான், இனி கல்லாப் பெட்டியை நிரப்ப முடியாது என்கிற கோபத்தில் சிலர் இருக்கின்றனர். வாக்குப் பதிவுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் பொதுமக்களை அவர்கள் அச்சுறுத்தி வருகின்றனர். வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி, மிரட்டி வருகின்றனர். இத்தகைய அராஜகப் போக்கைக் காவல் துறை தடுத்து நிறுத்த வேண்டும்.
மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும். தேர்தல் ஆணையம் தனது கண்காணிப்புப் பணிகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (14)
Narasimhan - Manama,இந்தியா
13 ஏப்,2026 - 19:05 Report Abuse
நடித்தோமா ஜாலியா இருந்தோமா என்றில்லாமல் நீங்களும் ஏன் அரசியல் சாக்கடையில் விழுகிறீர்கள். வேஸ்ட் ஆப் டைம் . இருநூறு ருபாய், குவாட்டர் பிரியாணி, டாஸ்மாக்கில் தடையில்லா சரக்கு சப்ளை, கூடுதல் பத்து ருபாய் இருந்துட்டு போகட்டும். இவை இருந்தால் போதும். அவர்களுக்குத்தான் எங்கள் ஒட்டு 0
0
Reply
கனோஜ் ஆங்ரே - மும்பை,இந்தியா
13 ஏப்,2026 - 18:29 Report Abuse
நீ சைக்கிள் ஓட்டுனப்பவே இந்த ஊரே, உலகமே பார்த்து சிரிச்சதே... “எடுத்தேன் பாரு ஓட்டம்”...னு உன் கட்சித் தொண்டர்களை பார்த்து ஓடுன ஒரே தலைவன் நீதான்டா...? அந்தந்த கட்சித் தலைவன் தன் கட்சித் தொண்டர்களை அவர்களை பார்க்க வந்தால், இவர்களே ஓடிப் போய் கைகுலுக்குவார்கள், வணக்கம் தெரிவிப்பார்கள்... கட்டிபிடிப்பார்கள்... இந்த தற்குறி என்னடான்னா... சைக்கிள விட்டுவிட்டு.. “எடுத்தேன் பாரு ஓட்டம்”னு வடிவேல் மாதிரி ஓடுன ஓட்டத்தை பார்த்து... ஊரே, உலகமே காறி துப்புது... 0
0
Reply
கனோஜ் ஆங்ரே - மும்பை,இந்தியா
13 ஏப்,2026 - 18:26 Report Abuse
இதெல்லாம் இருக்கட்டும்... நீ அரசாங்கத்துக்கு கட்ட வேண்டிய வருமான வரிய ஒழுங்கா கட்டு... 300, 400கோடி சம்பாதிக்கிறவன்...னு சொல்ற 1.5 கோடி வருமான வரியை மத்திய அரசுக்கு கட்டமாட்டேன்னு நீதிமன்றத்துக்கு போயிருக்கிற... நீயெல்லாம் ஒரு அரசியல் கட்சித் தலைவன்... அவனவன் அரசியலுக்கு வந்த பிறகுதான் ஏமாத்துவானுங்க... மோசடி பண்ணுவானுங்க... நீ அரசியலுக்கு வருவதற்கு முன்னாடியே வருமானவரி கட்டமாட்டேன்னு சொல்ற...? பொறக்குறப்பவே மோசடிக்கு பொறந்தவனா... நீ...? 0
0
Reply
Kadaparai Mani - chennai,இந்தியா
13 ஏப்,2026 - 17:52 Report Abuse
First to politician to introduce work at home for tamil nadu politicians. Always taking rest and trusted B team of DMK and stalin family through the advisors whose religious aspirations are different. 0
0
Reply
உண்மை கசக்கும் - Chennai,இந்தியா
13 ஏப்,2026 - 17:45 Report Abuse
திருடர்கள் கட்சி இரண்டுமே பொறுக்கிகள் அதிகம் உள்ள ரவுடி கட்சிகள் 0
0
கனோஜ் ஆங்ரே - மும்பை,இந்தியா
13 ஏப்,2026 - 19:09Report Abuse
அவங்களையாவது “பொறுக்கிகள், ரவுடிகள்”...னு மனுஷ ஜன்மத்தில் சேர்த்துட்ட...? ஆனால், உன் தலைவன் விஜய் தொண்டர்கள் அத்தனையும் “வானர”ங்களாகவும் “குரங்கு” கூட்டங்களாவும் இருக்கே... ஒண்ணு, டிரான்ஸ்பார்ம்ல ஏறுது... இல்லென்னா... மரத்துமேலே ஏறுது...? எல்லாமே “குரங்கு கூட்டமா” இருக்கே...? அதுக்கு என்ன சொல்ற...? 0
0
Reply
V RAMASWAMY - Bengaluru,இந்தியா
13 ஏப்,2026 - 16:46 Report Abuse
விளம்பரம் என்றாலே மிகைப்படுத்ததால் தான், ஆனால் அதையும் இவர்கள் செய்வது உருட்டு புரட்டு இல்லாததை இருப்பது போல் காண்பிக்கும் பொய் விளம்பரங்கள். எந்த பேச்சும் செயல்களும் நம்பிக்கைக்குரியதல்ல. 0
0
Reply
Sangi Mangi - ,இந்தியா
13 ஏப்,2026 - 16:26 Report Abuse
தேர்தல் ஆணையம் தன் களப்பணியை துரித படுத்ததும்,, நீ போய் உன் பனையூர் பங்களாவில் நல்ல துங்கு தூங்கு தம்பி ... உன்னை நம்பி படம் எடுத்தவான் நாசமா போகட்டும் .. 0
0
Reply
M.Selvam - Chennai/India,இந்தியா
13 ஏப்,2026 - 16:24 Report Abuse
விளம்பரத்தை நம்பியே தொழில் நடத்தும் சினிமா காரர் இப்படியா பேசி மாட்டிக் கொள்வது ??? எழுதிக் கொடுப்பதை வாசிச்சா இதான் பிரச்சினை 0
0
Reply
mindum vasantham - madurai,இந்தியா
13 ஏப்,2026 - 16:21 Report Abuse
பாயிண்ட் பிடிச்சுருக்காரு தளபதி 0
0
vijai hindu - ,
13 ஏப்,2026 - 17:17Report Abuse
விமானப்படை தளபதியா இல்லை கப்பல்படை தளபதியா 0
0
Reply
Anand - chennai,இந்தியா
13 ஏப்,2026 - 16:20 Report Abuse
அவர்களாவது வெற்று விளம்பரம் என சித்த நேரம் வெளியில் வந்தாவது ஏதோ உருட்டுகிறார்கள், ஆனால் நீ காராவான் உள்ளிருந்து சொகுசாக உல்லாசமாக இருந்தபடி கட்சியை நடத்துகிறேன் என ஊரை/குடும்பத்தை/பித்துக்குளி தொண்டனுங்களை ஏமாற்றி சர்க்கஸ் செய்துக்கொண்டிருக்கிறாய். 0
0
Reply
மேலும் 2 கருத்துக்கள்...
மேலும்
-
மொபைல் போன் இல்லாத இனிய உலகம்
-
விக்டோரியா எட்வர்டு மன்றத்திற்கு தேர்தல் நடத்த 6 மாதம் அவகாசம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
-
இபிஎஸ் அதிமுகவை கலைத்து விடலாம்; சொல்கிறார் ஸ்டாலின்
-
இறந்து கரை ஒதுங்கிய ராட்சத கடல் பசு
-
மதுரை தி.மு.க., பிரமுகர் வீட்டில் ஐ.டி., ரெய்டு
-
குமுளியில் கூடுதல் பஸ் வசதியின்றி ஐயப்ப பக்தர்கள், பயணிகள் அவதி
Advertisement
Advertisement