இபிஎஸ் அதிமுகவை கலைத்து விடலாம்; சொல்கிறார் ஸ்டாலின்
தர்மபுரி: இபிஎஸ் அதிமுகவை கலைத்துவிட்டு, பாஜவில் சேரலாம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தர்மபுரியில் நடந்த தேர்தல் பிரசார கட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
சிந்திக்குமா
திராவிட மாலில் இந்தியாவுக்கே வழிகாட்டுகிற ரோட்டை போடுகிறோம். இந்த பாதையில் முன்னோக்கி போக வேண்டும் என்று தான் ஒட்டுமொத்த இந்தியாவை அழைக்கிறோம். இது பாஜவுக்கு பிடிக்கவில்லை. தொகுதி மறுசீரமைப்பு என்ற மிகப்பெரிய ஆபத்து வந்துள்ளது. மக்கள்தொகையை கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கு அதிக இடங்கள் கிடைக்கும்.
இதனால், பார்லிமென்டில் நமது குரல் வலுவிழந்து போகும். நமது எம்பிக்களுக்கு அதிகாரம் இல்லை என்றால், டில்லி அதிகார வர்க்கம் தமிழகத்தை பற்றி சிந்திக்குமா? நமக்கு எந்த திட்டமாவது கிடைக்குமா?
தென் மாநிலங்களில் இருந்து பிரதமர் உருவாவார் என எதிர்பார்க்க முடியாது. சொந்த நாட்டிற்கு உள்ளேயே இரண்டாம் தர குடிமக்களாக மாற்றப்படக்கூடிய கொடுமையை அனுமதிக்கலாமா? இந்த ஆபத்து தான் தொகுதி மறுசீரமைப்பு.
சுயமரியாதை
தமிழகத்தில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தும் போது டில்லியில் நமது எம்பிக்கள் பார்லிமென்டில் போராடி கொண்டு இருக்கின்றனர். தேர்தல் வேலையில் அனைத்து எம்பிக்களும் இருந்தனர். அனைவரும் டில்லி போய்விட்டனர். ஒருத்தர் கூட இருக்க முடியாது எனக்கூறியுள்ளேன்.
@quote@தேர்தல் எல்லாம் அப்புறம். இதுதான் முக்கியம். இதுதான் சுயமரியாதை.quote
நாளைக்கு நமது குரல் எழுப்ப தவறினால், நமது குரலுக்கு எப்போதும் மதிப்பு இருக்காது. இந்த போராட்டத்தில் வெற்றி பெறும் வரை நமது உரிமைக்குரல் அடங்கக்கூடாது. டில்லி அடங்கும் வரை நாம் அடிக்கணும். நாம் அடிக்கிற அடியில் திமிர் எடுத்த பாஜ அடங்கியே ஆக வேண்டும். இது தமிழகத்துக்கான போர்.
துரோக கூட்டணி
இபிஎஸ் இதிலாவது கொஞ்சம் சுயமரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். அடிமையாகவும், துரோகியாகவும் இருப்பது இபிஎஸ்க்கு மட்டும் பழக்கமல்ல. அவர்களுடன் கூட இருப்பவர்களை பாருங்கள். துரோகிகளின் கூடாரமாக இருப்பது தேஜ கூட்டணி.
ஒவ்வொருவரின் முதுகை குத்தி விட்டு, தற்போது தமிழகத்தின் முதுகில் குத்த தனது முதுகை பாஜவுக்கு வாடகைக்கு விட்டுள்ளார் இபிஎஸ்.
அன்புமணி மீது விமர்சனம்
மற்றொருவர், ராமதாசை வேதனையில் தவிக்கவிட்டு உலக மகாஉத்தமர் போல்உங்களை ஏமாற்றி வருகிறார். அவரை பற்றி ஒரு வார்த்தை கூட நான் பேச விரும்பவில்லை. அவரைப்பற்றி பேசினால் எனது தகுதி குறைந்துவிடும். ராமதாசே இவரைப்பற்றி, அசிங்கம் என சொல்லி உள்ளார். இதை சொல்லக்கூட வெட்கமாக உள்ளது. கேவலமாக இருக்கிறது.
மூன்று மாணவிகளை எரித்த அதிமுக, குற்றவாளிகளை விடுதலை செய்த இபிஎஸ் கையை பிடித்துக் கொண்டு மறுபக்கம் நாட்டு மக்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக பேசும் பாஜ கையை தூக்கிக்கொண்டு வருகின்றனர். பாஜவுக்கு கூஜா தூக்கி, சமூக நீதிக்கே துரோகம் செய்கிறவர் தான் ராமதாசுக்கும் துரோகம் செய்தவர். இதனால் தான் தேஜ கூட்டணியை துரோக கூட்டணி என தர்மபுரியும், தமிழகமும் சொல்கிறது.
கூச்சம் வேண்டாம்
மகளிர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான நாக்கில் நரம்பு இல்லாமல் பேசுகிறார் இபிஎஸ். உங்கள் உள்நோக்கம், ஸ்டாலினை வசைபாடுவது கிடையாது. உங்கள் முதுகில் சவாரி செய்யும் பாஜவை காப்பாற்றுவது.
மும்மொழி கொள்கை, பொதுசிவில் சட்டம், தொகுதிமறுசீரமைப்பு பேராபத்தை எதிர்க்கவில்லை. தமிழகத்துக்காக குரல் கொடுக்காத நீங்கள் எதற்காக கட்சி நடத்துகிறீர்கள்? கூச்சமே இல்லாமல் ஓட்டு கேட்கிறீர்கள். நீங்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜவில் சேர்த்துவிடுங்கள். கூச்சப்படாதீர்கள். தேர்தலுக்கு இன்னும் 7 நாட்கள் உள்ளன. திராவிட மாடல் 2.0 துவங்குவதற்கான நேரம் வந்துவிட்டது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
திருப்பரங்குன்றம் முருகன் உனக்கு தகுந்த தண்டனை கொடுப்பார்.
அப்படி பார்த்தா திராவிட மாடல் கட்சியை 30 ஆண்டுகளுக்கு முன்பே கலைத்திருக்க வேண்டும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியிலும், பி ஜே பி ஆட்சியிலும் வௌவால் மாதிரி விடாம தொங்கிக்கிட்டு உங்க குடும்ப வாரிசுகளுக்கு ஆட்சியில் பங்கு, கொள்ளையில் பங்குன்னு சேர்த்து எந்த விதத்தில் நியாயம். அடுத்தவங்களை பற்றி பேசுவதற்கு முன் உங்கள் பின் பக்கம் திரும்பி பார்த்து, நாற்றத்தை அகற்றவும். ஊருக்கு உபதேசமெல்லாம் வேண்டாம்.
நாம் பதில் சொல்ல வேண்டாம்.
இந்த தேர்தல் உன்குடும்பத்தை காலி செய்து விடும். உன் கட்சி தானாகவே அழிந்துவிடும்
ஆச...தோசை....அப்பள....வட.......அதுக்கு வாய்ப்பு இல்ல ராசா....இப்படி எல்லாம் சொன்னா மக்கள் மீண்டும் உங்கள முதல்வரா ஆக்கிடிவங்களா என்ன..
நீ செய்த சாதனைகளை சொல்லி வாக்கு கேளு ஏன் தேவையில்லம எடப்பாடியை வம்புக்கு இழுக்குற உனது தோல்வி பயம் முகத்தில் தெரிகிறது..ஹிஹிஹி
கடைசி வரை என்ன செய்தோம் என்ன செய்யப்போகிறோம்
கலையோ க.லைன்னு க.லைச்சி.ட்டாங்க தலைவா.,எந்த பொய்யாவது பித்தலாட்டமாவது செய்து மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடிக்க முயலும் ஆத்திரம் அ.ப்பட்டமா அசிங்கமா தெரியுது
ஹாஹாஹா காமெடி தாங்க முடியல நைனா
பழனிசாமி பிஜேபியில் சேர்வது வரவேற்கத்தக்கது. அது அவர் இஷ்டம். விரைவில் செய்வார் என்பதையும் எதிர்பார்க்கலாம். அதற்காக ஸ்டாலின் பொறாமைப்பட வேண்டாம்.
திமுகவுக்கு கருணாநிதி காலத்திலிருந்து இப்போது ஸ்டாலின் காலம் வரை நெருக்கடி கொடுப்பது அதிமுக தானே. இப்போதும் அதிமுகவுக்கு பயந்தானே உரிமைத் தொகையுடன் 5000 ரூபாய் மக்களுடன் ஸ்டாலின் உங்களுடன் ஸ்டாலின் உங்கள் கனவை சொல்லுங்கள் என எடப்பாடி உங்களை பொலம்ப வைத்து விட்டார் இன்றும் எடப்பாடி இல்லையென்றால் திமுகவுக்கு குளிர் விட்டு போயிருக்கும். 8000 ரூபாயை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று ஒரு முதல்வர் மக்களிடம் கேட்கிறார் என்றால் மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை நாம் நன்றாக தெரிந்து கொள்ளலாம். நாம் கேட்கும் ஒரே கேள்வி ஐந்து ஆண்டுகளில் ஐந்தரை இலட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறீர்களே அதை வைத்து என்ன செய்தீர்கள்.மேலும்
-
போதை இளைஞர்களை நல்வழிப்படுத்த வாய் திறக்காத விஜய்: பதறும் பெற்றோரின் பரிதவிக்கும் கேள்வி!!
-
தமிழகத்தில் இதுவரை ரூ.1262 கோடி பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல்
-
ஓட்டுப்போட வந்த 3 பேர் பலி; ஓசூர் அருகே கோர விபத்து
-
திருவண்ணாமலையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
-
தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது
-
பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: பிரதமர் மோடி