முதல்வர் ஸ்டாலின் திட்டத்தை மற்ற மாநில முதல்வர்களும் பின்பற்றுகிறார்கள் :அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு
சிங்கம்புணரி:முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டத்தை மற்ற மாநில முதல்வர்களும் பின்பற்றுகிறார்கள் என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
திருப்புத்துார் தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் பெரியகருப்பன் சிங்கம்புணரி பகுதியில் நேற்று பிரசாரம் செய்தார். காளாப்பூர், அரசினம்பட்டி, ம.கோவில்பட்டி, அணியம்பட்டி, வகுத்தெழுவன்பட்டி, செருதப்பட்டி, கண்ணமங்கலப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்தபோது அவர் பேசியதாவது:
இத்தொகுதி மக்களுக்கு நான் புதியவன் அல்ல, பழக்கப்பட்டவன் தான். அண்ணாதுரை, கருணாநிதியின் ஒட்டுமொத்த கலவையாக இருக்கும் முதல்வர் ஸ்டாலின் எனக்கு இத்தொகுதியில் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை தந்திருக்கிறார். ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் செய்யவிருக்கும் திட்டங்களை வாக்குறுதியாக தந்துள்ளதற்கு ஆக்கம், ஊக்கம் தரும் வகையிலும் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும். ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக தொடர வேண்டும். இந்தியாவிலேயே சிறந்த, வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழகத்தை ஸ்டாலின் முன்னேற்றி உள்ளார்.
இதுபோல் ஒரு முதல்வர் நமக்கு கிடைக்க மாட்டாரா என்று தமிழகத்தை பார்த்து மற்ற மாநில மக்கள் ஏங்குகிறார்கள். நமது திட்டங்களை மற்ற முதல்வர்கள் அந்தந்த மாநிலங்களில் செயல்படுத்துகிறார்கள் என்றார். சுற்றுப்பயணத்தின் போது ஒன்றிய செயலாளர் பூமிநாதன், பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து, தே.மு.தி.க., தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும்
-
மொபைல் போன் இல்லாத இனிய உலகம்
-
விக்டோரியா எட்வர்டு மன்றத்திற்கு தேர்தல் நடத்த 6 மாதம் அவகாசம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
-
இபிஎஸ் அதிமுகவை கலைத்து விடலாம்; சொல்கிறார் ஸ்டாலின்
-
இறந்து கரை ஒதுங்கிய ராட்சத கடல் பசு
-
மதுரை தி.மு.க., பிரமுகர் வீட்டில் ஐ.டி., ரெய்டு
-
குமுளியில் கூடுதல் பஸ் வசதியின்றி ஐயப்ப பக்தர்கள், பயணிகள் அவதி