கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு
: அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் கடற்கரையோரத்தில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் கப்புகள் சிதடி கிடப்பதால், சுற்றுச்சூழலை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
சுற்றுலாவை மேம்படுத்த புதுச்சேரி அரசு பல்வேறு திட்டங்கள் மூலம் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விடுமுறை நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகையால், புதுச்சேரி சுற்றுலாத்துறைக்கு அதிக வருமானம் கிடைத்து வருகிறது.
வீராம்பட்டினம் கடற்கரையோரத்தில், சவுக்கை மரங்கள் அடர்த்தியாக உள்ளன. அங்குள்ள சவுக்கு மரம் தோப்பிற்குள் மது குடித்து வருகின்றனர். மது குடிப்பதற்காக, வாட்டர் பாட்டில், பிளாஸ்டிக் கப்பு, போன்றவற்றை அங்கேயே வீசி விட்டு செல்கின்றனர்.
குடி பிரியர்கள் வீசி விட்டு சென்ற பிளாஸ்டிக் குப்பைகள் அந்த பகுதியல் மண்ணில் புதைந்தும், பல இடங்களில் சிதடி கிடக்கிறது. இதனால், மண்ணின் தன்மை பாதிப்பு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
புதுச்சேரி அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள், கடற்கரை பகுதியில் கிடக்கும் குப்பைளை அகற்றி சுற்றுச்சூழலை பாதுகாப்போம், துாய்மையான நகரமாக உருவாக்குவோம் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், சுற்றுச்சூழலை பற்றி கவலைப்படாமல், மது குடிப்பவர்களும், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளும், பிளாஸ்டிக் கவர்கள், காலி வாட்டர் பாட்டில்களை கடற்கரை பகுதியில் வீசி வருகின்றனர்.
வீராம்பட்டினம் சவுக்கு தோப்பு மற்றும் கடற்கரை பகுதியில் சிதறி கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாக்க அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பொதுமக்களும் கடைப்பிடித்தால் தான் சுற்றுச்சூழல் பாதுகாக்க முடியும் என்பது சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
மொபைல் போன் இல்லாத இனிய உலகம்
-
விக்டோரியா எட்வர்டு மன்றத்திற்கு தேர்தல் நடத்த 6 மாதம் அவகாசம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
-
இபிஎஸ் அதிமுகவை கலைத்து விடலாம்; சொல்கிறார் ஸ்டாலின்
-
இறந்து கரை ஒதுங்கிய ராட்சத கடல் பசு
-
மதுரை தி.மு.க., பிரமுகர் வீட்டில் ஐ.டி., ரெய்டு
-
குமுளியில் கூடுதல் பஸ் வசதியின்றி ஐயப்ப பக்தர்கள், பயணிகள் அவதி