அண்ணாகிராமம் ஒன்றிய பகுதியில் வி.சி., வேட்பாளர் அப்துல்ரஹ்மான் ஓட்டு சேகரிப்பு
பண்ருட்டி: பண்ருட்டி தொகுதி அண்ணாகிராமம் ஒன்றிய பகுதியில் வி.சி.கட்சி., வேட்பாளர் அப்துல்ரஹ்மான் பானை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
பண்ருட்டி சட்டசபை தொகுதி, வி.சி.கட்சி., வேட்பாளர் அப்துல்ரஹ்மான், அண்ணாகிராமம் ஒன்றியம், பண்டரக்கோட்டை, அம்மாபேட்டை, வாணியம்பாளையம், நல்லுார்பாளையம், ஒறையூர், பலாப்பட்டு ,ரெட்டிக்குப்பம், ஏ.பி.குப்பம், அவியனுார், காவனுார், எனதிரிமங்கலம், கரும்பூர்,கொரத்தி, அக்கடவல்லி, திருத்துறையூர் , சின்னபேட்டை, பணப்பாக்கம், கணிசப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் தீவிர ஒட்டு சேகரித்தார்.
வேட்பாளர் அப்துல்ரஹ்மான் பேசுகையில்; தி.மு.க., ஆட்சியில் மக்களுக்காக சிறப்பான திட்டங்கள் அரசு செயல்படுத்தியுள்ளது. மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது. அரசின் திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்க பாடுவேன் என்றார்.
ஒன்றிய செயலாளர்கள் வெங்கட்ராமன் , ராமு, பொதுக்குழு உறுப்பினர் பலராமன், வி.சி., மாவட்ட செயலாளர் அருள்செல்வம், மா. கம்யூ.,லோகநாதன், காங்., கேசவன், இந்திய கம்யூ., ஆறுமுகம், ம.தி.மு.க., ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.