போனஸ் பங்குகள் 1:1 எல்.ஐ.சி., அறிவிப்பு

த னது பங்குதாரர்களுக்கு, 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க, 'எல்.ஐ.சி.,' நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு, நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் வாயிலாக, ஒரு எல்.ஐ.சி., பங்கு வைத்திருக்கும் முதலீட்டாளருக்கு, கூடுதலாக ஒரு பங்கு இலவசமாக கிடைக்கும்.

முக்கிய விபரங்கள்

 இதற்காக, 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட கிட்டத்தட்ட, 632.49 கோடி ஈக்விட்டி பங்குகளை வழங்க எல்.ஐ.சி திட்டமிட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 6,324.99 கோடி ரூபாய்

 பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு பின், வருகிற ஜூன் 12ம் தேதிக்குள் இந்த போனஸ் பங்குகள் முதலீட்டாளர்களின் கணக்கில் சேர்க்கப்படும்

 இந்த போனஸ் வழங்கலுக்கு பின், எல்.ஐ.சி.,யின் பங்கு மூலதனம் 6,324.99 கோடி ரூபாயிலிருந்து 12,649.99 கோடி ரூபாயாக உயரும்

 டிசம்பர் 31, 2025 நிலவரப்படி, எல்.ஐ.சி.,யிடம் 1.46 லட்சம் கோடி ரூபாய் உபரி நிதி உள்ளது

 2025ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், இந்நிறுவனம் 33,998 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.

@block_B@ நோக்கம் என்ன? எல்.ஐ.சி., நிறுவனத்தில் கிட்டத்தட்ட 20.90 லட்சம் சில்லரை முதலீட்டாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு பயனளிக்கும் வகையிலும், சந்தையில் பங்குகளின் புழக்கத்தை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், பங்குகளின் விலை குறைந்து, அதிகப்படியான புதிய முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க ஏதுவாக இருக்கும். இந்த போனஸ் அறிவிப்பால், நிறுவனத்தின் நிதி நிலையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என எல்.ஐ.சி., தெளிவுபடுத்தியுள்ளது.block_B

Advertisement