3 புதிய டிஜிட்டல் தளங்கள் செபி துவங்கி வைத்தது

த னது நிர்வாக நடவடிக்கைகளை எளிதாக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், மூன்று முக்கிய தகவல் தொழில்நுட்ப தளங்களை 'செபி' அறிமுகப்படுத்திஉள்ளது. கடந்த மார்ச் 24ம் தேதி அன்று செபி தலைவரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த தளங்கள், தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த தொழில்நுட்ப மாற்றங்கள் மூலம் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும் என்றும், சந்தை பங்கேற்பாளர்கள் இந்த வசதிகளை பயன்படுத்தி கொள்ளுமாறும், செபி கேட்டுக்கொண்டுள்ளது.

புதிய தளங்களின் விபரம் 1 இனி செபிக்கும் வெளி நிறுவனங்களுக்கும் இடையிலான அனைத்து தொடர்புகளும் மின்னஞ்சலுக்கு பதிலாக 'சப்காம்ஸ்' (SUPCOMS) என்ற ஒரே தளத்தின் கீழ் கொண்டுவரப்படும். இது தகவல் பரிமாற்றங்களை முறைப்படுத்தவும், பழைய தரவுகளை தடையின்றி பாதுகாக்கவும் உதவும். பதிவு செய்யப்பட்ட இடைத்தரகர்கள் மற்றும் நிறுவனங்கள், செபியின் 'இ-சர்வீசஸ்' (eservices.sebi.gov.in) இணையதளம் வாயிலாக 'சப்காம்ஸ்' வசதியை அணுகலாம்.

2 செபியின் விசாரணை மற்றும் தீர்ப்பு வழங்கும் நடைமுறைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் 'இ- - அட்ஜூடிகேஷன்' (e-Adjudication) என்கிற புதிய தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனங்கள் தங்களுக்கு எதிரான புகார்கள் குறித்த நோட்டீஸ்களை பதிவிறக்கம் செய்யவும், ஆன்லைன் மூலமாகவே விசாரணையில் பங்கேற்கவும் முடியும்.

3 செபியால் முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் இணைய பாதுகாப்பை கண்காணிக்க ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய 'சி-சாக்' தளம் தொடங்கப்பட்டுள்ளது. இது நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் பாதுகாப்பு தணிக்கை அறிக்கைகளை தானாகவே ஆய்வு செய்து, குறைபாடுகள் இருந்தால் எச்சரிக்கும்.

Advertisement