கடந்த தேர்தலில் 6 மணிக்கு 73.61% ஓட்டுப்பதிவு; இந்த தேர்தலில் 84.29 சதவீதம்
நமது நிருபர்
எஸ்ஐஆர் பணிக்கு பிறகு நடக்கும் முதல் தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் சூழலில், மாலை 6 மணி நிலவரப்படி, 84.29 சதவீதம் ஓட்டுப்பதிவாகி உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் மாலை 6மணி நிலவரப்படி 73.61% ஓட்டுகள் பதிவானது.
தமிழகத்தில், 2026 சட்டசபை தேர்தல் இன்று நடந்து வரும் நிலையில், எஸ்.ஐ.ஆர்., வாயிலாக, லட்சக்கணக்கான வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் மாநிலம் முழுக்க, 14 லட்சம் புதிய வாக்காளர்கள் இணைந்துள்ளனர்.
'நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு என்பது தான், தேர்தல் கமிஷனின் இலக்காக உள்ள நிலையில், இம்முறை அந்த இலக்கை எட்டிப்பிடிக்க வேண்டும்' என்பதில், தேர்தல் கமிஷன் உறுதியாக இருக்கிறது. எனவே, தேர்தல் கமிஷன் முன்னெப்போதும் இல்லாத வகையில் பல புதுமையான முயற்சிகளை இம்முறை மேற்கொண்டது.
அதன்படி காலை முதலே மக்கள் ஆர்வமாக ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி, 17.69 சதவீதம் ஓட்டுப்பதிவாகி உள்ளது.
பிறகு காலை 11 மணி நிலவரப்படி ஓட்டுப்பதிவு 37.56 சதவீதமாக அதிகரித்தது.
பிறகு மதியம் 1 மணி நிலவரப்படி, ஓட்டுப்பதிவு சதவீதம் 56.81 சதவீதமாக அதிகரித்தது.
தொடர்ந்து மபிற்பகல் 3 மணி நிலவரப்படி ஓட்டு சதவீதம் 70 சதவீதமாக அதிகரித்தது.
மாலை 5 மணி நிலவரப்படி 82.24 சதவீதம் ஓட்டுப்பதிவாகி உள்ளது.
மாலை 6 மணி நிலவரப்படி 84.29 சதவீதம் ஓட்டுப்பதிவாகி உள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 73.61% ஓட்டுகள் பதிவாகி இருந்தது.
கடந்த தேர்தலை விட அதிகமான மக்கள் ஓட்டளித்து வருவதால் அதிகமான ஓட்டுக்கள் பதிவாகும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துளளது. எஸ்.ஐ.ஆர்.க்கு பின், சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், ஓட்டு சதவீதம் கணிசமாக அதிகரிக்க வேண்டும் என்பதில் தேர்தல் கமிஷன் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுதிக்கு 22000 ஒட்டு வரை சராசரியாக SIR மூலம் குறைந்து இருக்கிறது . தற்போதைய குறைந்த ஓட்டுக்கு தான் சதவீதம் கணக்கிட படுகிறது எனவே வாக்கு சத வீதமும் உயர வாய்ப்பு உள்ளது . ஆனால் புதிதாக சேர்ந்த ஓட்டுக்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் . மேலும் விஜய்க்கு க்கு ஒட்டு போட துடிக்கும் இளைஞர்களால் ஒட்டு சத வீதம் அதிகரிக்கிறது
தீயமூக அடியோடு அழியவேண்டும்
வாக்களிக்கும் சதவீதத்தை பார்க்கும்போது மேற்கு மண்டலங்கள் அதிகமாக வாக்குப்பதிவு நடக்கின்றது.. இது அதிமுக கூட்டணி நிறைய இடங்களை வாங்கப்போவதை காட்டுகின்றது.. குறிப்பாக திருப்பூர் தான் டாப். அதிகமாக வடக்கர்கள் ஓட்டுரிமை வைத்து இருக்கும் இடம்.. பி.ஜே.பி க்கு தான் அவர்கள் வாக்களிப்பார்கள்.
தமிழர்கள் தன்மானத்துடன் வாழ தமிழர் எடப்பாடியாரை ஆதரிக்க வேண்டும்.
அவரு தான் ஐயா
முதல் தலைமுறை வாக்காளர்கள் 11% அவர்கள் அனைவரும் இபோது தங்கள் வாக்கை பதிவு செய்து முடித்து இருப்பார்கள் , மக்கள் இந்த தவிட்டு திராவிட மாடல் மீது கொலை வெறியில் உள்ளார்கள்
அதுவும் ஒரு காரணம் ....
எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர்கள் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சீர்திருத்தம் காரணமாக, சுமார் 74 லட்சம் இறந்த, இடம் மாறிய வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். இது தமிழகத்தில் கள்ள ஓட்டு போடுவதை பெருமளவு தடுத்துள்ளது. இதனால் தமிழக வாக்கு சதவீதம் 80 சதவீதம் வரை அதிகரிக்கும். மேலும் இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ள பெரும் எழுச்சி காரணமாக, விஜய் அலை தமிழகத்தை சுருட்டும் நிலை உள்ளதால், திமுக வின் 2.0 ஆட்சிக் கனவு கானல் நீர்தான்.
ஆளும் திமுகவிற்கு எதிரான அலை இருப்பது தெளிவாக தெரிகிறது
SIR ம் அதைவிட முக்கியமாக அண்ணா பல்கலைக்கழக சாரு க்கு எதிர்ப்பும் முக்கிய காரணம். விசை NOTA வுடன் போட்டி
இந்த எண்ணிக்கை எல்லாம் சும்மா கண்கட்டு வித்தை. நள்ளிரவு 1 மணிக்கு மேல் 5 லட்சம் வோட்டு ஆட்டோமேடிக்காக விழும். எல்லாம் சாத்தியம். வோட்டு சதவீதம் 98% ன்னு மூணு நாலு நாள் கழிச்சு போடுவாங்க. நாம பேன்னு முழிக்க வேண்டியது தான்.
நடக்கட்டும் விருமாண்டி..மொத்தத்தில் திமுக அடித்து விரட்டபட வேண்டும்
வாக்குப்பதிவு கூடியதற்கு SIR காரணமாக இருக்கலாம் .... அல்லது ஆட்சிக்கெதிரான கடுங்கோபமாக இருக்கலாம் .....மேலும்
-
வீடுகள் கட்டித்தரக்கோரி பளியன்குடியில் ஓட்டு போட மறுத்த பழங்குடியின மக்கள் - பேச்சுவார்த்தைக்குப் பின் ஓட்டளித்தனர்
-
மறவபட்டியில் இரவு 7:15 வரை நீடித்த ஓட்டுப்பதிவு
-
ஓட்டுச் சாவடிகளில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு
-
வேட்பாளர்கள் நேருக்கு நேர் சந்திப்பு
-
3 இடங்களில் தாமதமாக துவங்கிய ஓட்டுப்பதிவு
-
வண்ணமயமான ஓட்டுச்சாவடிகள்