ஓட்டுப்பதிவு வீடியோ வெளியிட்ட தவெக ஆதரவாளர் கைது
நமது நிருபர்
திருப்பத்துாரில் ஓட்டுப்பதிவு செய்ததை வீடியோ எடுத்து வெளியிட்ட தவெக ஆதரவாளர் கைது செய்யப்பட்டார்.
ஓட்டுச்சாவடிக்குள் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது சட்டப்படி குற்றமாகும். ஓட்டுச் சாவடிக்குள் வீடியோ எடுத்தால் சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படும் எனத் தேர்தல் கமிஷன் எச்சரித்து உள்ளது.
இந்நிலையில் திருப்பத்துாரில் ஓட்டுப்பதிவு செய்த வீடியோவை வெளியிட்ட தவெக ஆதரவாளர் சக்திவேலை போலீசார் கைது செய்தனர். இதேபோல் பலர் தாங்கள் ஓட்டு போட்ட வீடியோவை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாக தெரிகிறது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து (9)
தமிழன் மணி - ,இந்தியா
23 ஏப்,2026 - 15:55 Report Abuse
தேர்தல் ஆணையத்தின் லட்சணம் இதிலிருந்தே தெரிகிறது எந்தவொரு சோதனையும் வாக்குச் சாவடியில் கிடையாது பொதுவாக தேர்தல் ஆணையம் பல் இல்லாத ஆணையம் என்று மக்கள் கூறுவது உண்டு இதில் ஆச்சர்யமே எதுவும் இல்லை தருதலைகள் வெத்துவேட்டுக் கழகத்தின் கூமுட்டைகள் கூட்டம் தன் தலைவனைப் போலவே உள்ளது இதுல நாட்டை திருத்த போறானாம் 0
0
Reply
Murug Mani - ,இந்தியா
23 ஏப்,2026 - 14:57 Report Abuse
அந்த நடிகரும் அரசியல்வாதியுமானவரிடம் தமிழ்நாட்டைப் பற்றிய எந்த நுண்ணிய அல்லது பரந்த தரவுகளும் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள எந்தப் பிரச்சினையும் அவருக்குத் தெரியாது. முறையான பகுப்பாய்வோ அல்லது அதற்கான தீர்வோ இல்லாமல் அவர் வெறுமனே காற்றில் பேசுகிறார். அதன் செலவினங்களை அறியாமலும், அதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்காகவும் ஏதோ ஒரு தேர்தல் அறிக்கையை வெறுமனே வெளியிடுகிறார்.
நமது வெறித்தனமான ஆதரவாளர்கள் அதை வெறுமனே ஆரவாரம் செய்கிறார்கள். நீங்கள் மாறாத வரை அல்லது சரியாகச் சிந்திக்காத வரை எதுவும் மாறாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 0
0
Reply
Ramaraj P - ,
23 ஏப்,2026 - 14:33 Report Abuse
சீமான் ஓட்டும்போது வீடியோ எடுத்து மீடியாக்கள் வெளியிட்டு உள்ளதே. 0
0
Reply
Kadaparai Mani - chennai,இந்தியா
23 ஏப்,2026 - 14:17 Report Abuse
Severe punishment as per various laws and he should be barred from coning any election in Tamilnadu. 0
0
Reply
Shekar - ,
23 ஏப்,2026 - 14:16 Report Abuse
இதுக்குதான்னையா இவனுகள தற்குறின்னு சொல்றோம். 0
0
Reply
Manalan - chennai,இந்தியா
23 ஏப்,2026 - 13:59 Report Abuse
மொதல்ல ஓட்டுக்கு பணம் கொடுப்பதை நிறுத்துங்க அப்புறம் வீடியோ போடுறவன பிடிக்கலாம் 0
0
Reply
சூர்யா - ,
23 ஏப்,2026 - 13:39 Report Abuse
பல முறை ஓட்டுபதிவை வீடியோவாக எடுக்கக்கூடாது, வெளியிடக் கூடாது என தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியும் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர் தற்குறி அணில் குஞ்சுகள். எந்த தேர்தல் சட்டமும் எங்களிடம் எடுபடாது எனும் இது போன்ற தற்குறிகளை 3 வருடம் சிறையில் உள்ளே தள்ள வேண்டும். 0
0
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
23 ஏப்,2026 - 14:02Report Abuse
விஜயகாந்த் ஒட்டு போட்டபோது வீடியோ எடுத்து அதை டிவியில் ஒளிபரப்பு செய்தபோது தேர்தல் கமிஷன் என்ன செய்துகொண்டிருந்தது?
இன்று கூட பூத் ஸ்லிப்பில் செல் போன் அனுமதி கிடையாது என்று போட்டிருக்கும்போது தேர்தல் கமிஷன் அதிகாரிகள் எப்படி அனுமதித்தார்கள்? 0
0
Reply
Kanakala Subbudu - Chennai,இந்தியா
23 ஏப்,2026 - 13:33 Report Abuse
வாக்கு சாவடிக்குள் அலைபேசி எடுத்து செல்லக்கூடாது என்று இருக்கும்போது அவர்கள் எப்படி எடுத்து சென்றார்கள். அவர்களை சரியாக சோதிக்காத அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும் 0
0
Reply
மேலும்
-
எம்.சி.டி., மேயர் தேர்தலுக்கான வேட்பாளர் பா.ஜ., அறிவிப்பு
-
அருணா அசப் அலி மருத்துவமனையில் முதல்வர் ரேகா ஆய்வு
-
'மெமு' வகை பயணியர் ரயில்களில் 12 பெட்டிகளாக உயர்த்த கோரிக்கை
-
பழையசீவரத்தில் சுகாதார நிலையம் ஏற்படுத்த மக்கள் கோரிக்கை
-
மரத்தில் ஆணி அடித்து பதாகைகள் வைப்பதால் பட்டு போகும் பரிதாபம்: மரங்களை பாதுகாக்க வலியுறுத்தல்
-
மாதிரி ஓட்டுச்சாவடியில் சிவப்பு கம்பள வரவேற்பு
Advertisement
Advertisement