வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 குறைவு

சென்னை: தமிழகத்தில் நேற்று வெள்ளி கிலோவுக்கு, 5,000 ரூபாய் குறைந்தது.

தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 14,100 ரூபாய்க்கும், சவரன், 1,12,800 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிலோவுக்கு, 265 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 40 ரூபாய் குறைந்து, 14,060 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 320 ரூபாய் சரிவடைந்து, 1,12,480 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு, ஐந்து ரூபாய் குறைந்து, 260 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் சரிவடைந்து, 2.60 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

Advertisement