6 மணிக்குள் வரிசையில் நிற்போருக்கு 'டோக்கன்'
ஈரோடு :ஓட்டுப்பதிவு நாளில் மாலை, 6:00 மணிக்கு அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கும் டோக்கன் வழங்கி, ஓட்டுப்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர், என ஈரோடு கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் நிலவும் அதிக வெப்ப நிலையால், காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவை மிகச்சரியாக துவங்கிவிடலாம். அதை மாற்ற இயலாது. அதேநேரம் மாலையில், 6:00 மணிக்கு அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கும், அதிகாரிகள் டோக்கன் வழங்கி, முழுமையாக ஓட்டுப்பதிவு செய்ய அனுமதிக்கலாம். வெயிலுக்காக ஓட்டுச்சாவடி பகுதியில் சேமியானா என அந்தந்த பகுதி சூழலுக்கு ஏற்ப வசதி செய்யப்படும். தன்னார்வலர், தொண்டு நிறுவனம் மூலம் ஓட்டுச்சாவடியில், மோர் வழங்கவும் முயற்சி செய்கிறோம்.
மாற்றுத்திறனாளிகள் ஓட்டுச்சாவடிகளுக்கு செல்ல, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் தலா, 5 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய இணைய தளத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே, தங்கள் வீடுகளில் தபால் ஓட்டுக்களை பதிவு செய்ய இயலும். இவ்வாறு கூறினார்.
மேலும்
-
மொபைல் போன் இல்லாத இனிய உலகம்
-
விக்டோரியா எட்வர்டு மன்றத்திற்கு தேர்தல் நடத்த 6 மாதம் அவகாசம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
-
இபிஎஸ் அதிமுகவை கலைத்து விடலாம்; சொல்கிறார் ஸ்டாலின்
-
இறந்து கரை ஒதுங்கிய ராட்சத கடல் பசு
-
மதுரை தி.மு.க., பிரமுகர் வீட்டில் ஐ.டி., ரெய்டு
-
குமுளியில் கூடுதல் பஸ் வசதியின்றி ஐயப்ப பக்தர்கள், பயணிகள் அவதி