'பா.ஜ., வளர பழனிசாமி உதவுகிறார்'

வத்திராயிருப்பு: பா.ஜ., என்ற தீய சக்தியை தமிழகத்தில் வளர்ப்பதற்கு பழனிசாமி உதவி செய்கிறார், என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் குற்றம்சாட்டினார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதி வத்திராயிருப்பில் அவர் பேசியதாவது:

தொழிலாளர்களை பாதிக்கும் நடவடிக்கைகளில் தி.மு.க., அரசு ஈடுபட்டபோது கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் எதிர்த்தனர். அதன் நியாயத்தை உணர்ந்து அந்த நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் திரும்பப் பெற்றார்.

8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக்கும் சட்டத்தை திரும்ப பெற வைத்ததில் முக்கிய பங்கு இடதுசாரி கட்சிகளுக்கு உண்டு. 'கார்ப்ரேட்' ஆதரவு அரசாக மத்திய அரசு உள்ளது.

நெல்லுக்கான ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும் என மாநில அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்புகிறது. இதில் முதல்வர் பொய் தகவலை தரவில்லை.

பா.ஜ., என்ற தீய சக்தி தமிழகத்தில் வளர பழனிசாமி உதவுகிறார். அ.தி.மு.க.,வை பா.ஜ., உடைக்கிறது. அதற்கு பழனிசாமி துணை போகிறார் என்றார்.

Advertisement