தமிழ் புத்தாண்டால் பழ விற்பனை அமோகம்
ஈரோடு :
சித்திரை முதல் நாளான இன்று, தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள், தங்களது வீடுகளில் சுவாமிக்கு கனிகளை படைத்து சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடுவது வழக்கம். இதனால் ஈரோடு நேதாஜி தினசரி காங்கறி மார்க்கெட்டுக்கு பழங்களை வாங்க, மக்கள் நேற்று குவிந்தனர். இதனால் வழக்கத்தைவிட வியாபாரம் அமோகமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
அதேசமயம் கனி வகைகளின் விலையும் கணிசமான அளவிலேயே அதிகமாக இருந்தது. இதனால் மக்களும் பழங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். மார்க்கெட்டில் பழங்களின் விலை விபரம் (கிலோ-ரூபாயில்): ஆப்பிள்-300, திராட்சை-120, மாம்பழம்-150, சாத்துக்குடி-60, ஆரஞ்சு-160, மாதுளை-280 ரூபாய்க்கு விற்றது.
இதேபோல் சம்பத்நகர் உழவர் சந்தை, தள்ளுவண்டி கடைகள், சாலையோர கடைகளிலும் பழ விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மொபைல் போன் இல்லாத இனிய உலகம்
-
விக்டோரியா எட்வர்டு மன்றத்திற்கு தேர்தல் நடத்த 6 மாதம் அவகாசம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
-
இபிஎஸ் அதிமுகவை கலைத்து விடலாம்; சொல்கிறார் ஸ்டாலின்
-
இறந்து கரை ஒதுங்கிய ராட்சத கடல் பசு
-
மதுரை தி.மு.க., பிரமுகர் வீட்டில் ஐ.டி., ரெய்டு
-
குமுளியில் கூடுதல் பஸ் வசதியின்றி ஐயப்ப பக்தர்கள், பயணிகள் அவதி
Advertisement
Advertisement