தமிழக சட்டசபை தேர்தல்; பாஜ தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு

5

நமது சிறப்பு




சென்னையில் இன்று (ஏப்ரல் 14) காலை 11.30 மணிக்கு தமிழக சட்டசபை தேர்லுக்கான தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நட்டா வெளியிடுகிறார்.

அ .தி.மு.க., சார்பில் கடந்த மார்ச் 24ல் வெளியான தேர்தல் அறிக்கையில், வீட்டுக்கு ஒரு 'பிரிஜ்' அனைத்து குடும்பங்களுக்கும் 10,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்பது உட்பட, 297 வாக்குறுதிகள் வெளியிடப்பட்டன. தி.மு.க., மார்ச் 29ல் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.


அதில், 'வாஷிங் மிஷின், மிக்ஸி, பிரிஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க, இல்லத்தரசிகளுக்கு, 8,000 ரூபாய் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும் என்பது உட்பட 498 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. தமிழக பா.ஜ.,வில், தேர்தல் அறிக்கை தயாரிக்க, முன்னாள் கவர்னர் தமிழிசை தலைமையில், 12 பேர் அடங்கிய குழு, கடந்த ஜன., 18ல் அமைக்கப்பட்டது.


இக்குழு, பொதுமக்களிடம் கருத்து கேட்டு, கடந்த மாதம் தேர்தல் அறிக்கையை, மாநிலத் தலைமையிடம் அளித்தது. சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி கூட தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு விட்டது.


பா.ஜ., இன்னும் வெளியிடவில்லை. வாக்குறுதிகள் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று (ஏப்ரல் 14) காலை 11.30 மணிக்கு தமிழக சட்டசபை தேர்லுக்கான தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நட்டா வெளியிடுகிறார்.


வாக்குறுதிகளில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளை கவரும் வகையில் பல்வேறு திட்டங்கள் இடம்பெறும் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Advertisement