40 வகையான இட்லி, தோசைகளை சப்ளை செய்கிறோம்!
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் 12 இடங்களில், 'மெட்ராஸ் டாக்கீஸ்' என்ற பெயரில், சிற்றுண்டி உணவகங்களை நடத்தி வரும் தமிழரான மலையாண்டி:
என் சொந்த ஊர், திருநெல்வேலி மாவட்டம், அழகப்பாபுரம். பிழைப்பு தேடி, 1985ல் மும்பைக்கு வந்தேன். இங்கு ஒரு மில்லில் தற்காலிக ஊழியராக வேலைக்கு சேர்ந்தேன்.
ஆனால், தொழிற்சங்க தலைவர்களின் எதிர்ப்பு மற்றும் போராட்டம் காரணமாக, தொடர்ந்து வேலை கிடைப்பதில் சிக்கல் இருந்தது; தற்காலிக ஊழியர்களை அடிக்கடி வேலையை விட்டும் நீக்கினர்.
இதனால், மில் வேலையை விட்டுவிட்டு, தென்மும்பை கொலாபா பகுதியில் நானும், என் சகோதரரும் இட்லி, வடைகளை வீட்டில் தயாரித்து, தலையில் வைத்து எடுத்துச் சென்று விற்பனை செய்தோம்.
அடுத்து, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு சமைத்து தரும், 'கேட்டரிங்' தொழிலில் இறங்கினோம். 1992ல் என் திருமணத்திற்கு பின், எங்கள் வியாபாரம் விரிவடைந்தது.
இதனால், என் மற்ற சகோதரர்களையும் மும்பைக்கு அழைத்து வந்து, ஒவ்வொரு வேலையையும் ஒவ்வொருவர் பகிர்ந்து செய்ய ஆரம்பித்தோம். அடுத்து, 'மெட்ராஸ் டாக்கீஸ்' என்ற பெயரில், 2020ல் சிற்றுண்டி உணவகத்தை துவங்கினோம்.
ஆயினும், கொரோனாவுக்கு பின் சமையல் தொழிலில் தேக்கநிலை ஏற்பட்டது. எனவே, சிற்றுண்டி உணவகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்தோம். இப்போது, மும்பையில் சொந்தமாக இரு இடங்களிலும், 'பிரான்சைஸ்' எனும் கிளை உரிமம் முறையில், 10 இடங்களிலும், உணவகங்களை நடத்தி வருகிறோம்.
தற்போது, எங்கள் உணவகங்களில், 40 வகையான இட்லிகள் மற்றும் தோசைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இதில், தேங்காய் சிரட்டை இட்லி மிகவும் பிரபலம். சிரட்டையில் இட்லி அவித்து, அப்படியே சிரட்டையோடு இட்லியை பரிமாறுவோம்.
இப்படி, ஒவ்வொரு ஆண்டும் சில புதுமைகளை புகுத்தி வருகிறோம்.
எங்கள் உணவகங்கள் அனைத்திலும், உணவின் சுவை ஒரே மாதிரி இருக்கும். அதற்கு காரணம், சட்னி மற்றும் சாம்பாருக்கான மசாலாக்கள், இட்லி, தோசைக்கு தேவையான மாவை நாங்களே தயாரித்து, அனைத்து உணவகங்களுக்கும் அனுப்பி வைக்கிறோம். எங்கள் உணவகங்களில் ஆண்டுக்கு, 2.50 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது.
நாங்கள், இந்த தொழிலை குடும்பமாக இணைந்து செய்து வருகிறோம். இதில், என் சகோதரர்கள் எனக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். குடும்பத்தினர் ஒத்துழைப்பும், வாடிக்கையாளர்களின் ஆதரவும் தான் என் வளர்ச்சிக்கு காரணம்.
மிக்க மகிழ்ச்சி, உங்கள் உணவகங்களின் கிளைகள், சேவை மற்றும் வியாபாரம் பெருகட்டும், வாழ்த்துக்கள்.
வசதி இல்லாதோருக்கு மலிவு விலையில் உணவு அளியுங்கள், இறைவன் உங்கள் மூலமாக அவர்களை காப்பாற்றுவார். உங்களுக்கும் மென்மேலும் அருள் பாவிப்பார்.
வாழ்க வளர்க
contact cell number
இவரது வியாபார வெற்றியின் இரகசியம் இவரது அண்ணன்தம்பிகளின் ஒற்றுமையில் அடங்கி இருக்கிறது . இவரது குடும்ப அன்பிற்குப் பாராட்டுக்கள் இவர்களது வாழ்க்கை வளம்பெற வாழ்த்துக்கள் THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.மேலும்
-
15வது மாடியிலிருந்து குதித்து 26 வயது வக்கீல் தற்கொலை
-
மகளிர் மசோதாவை தோற்கடித்தது பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி: சந்திரபாபு நாயுடு
-
வாகனங்களுக்கு சுற்றுச்சூழல் கட்டணம் அதிகரிக்க டில்லி மாநகராட்சி முடிவு
-
கணவரை கொல்ல முயன்ற கும்பலால் மனைவி சரமாரியாக வெட்டி கொலை
-
தமிழகத்தை பாஜ கட்டுப்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம்: ராகுல்
-
வானில் விரியும் வண்ணக் கோலங்கள்