இதே நாளில் அன்று
ஏப்ரல் 16:
வேலுார் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவரும், வனத்துறை அதிகாரியுமான, சேஷகிரி ராவின் மகளாக, ஆந்திர மாநிலம், நெல்லுாரில், 1922ல் இதே நாளில் பிறந்தவர், ராஜேஸ்வரி எனும் அநுத்தமா.
தெலுங்கு வழியில் ஆரம்ப கல்வி பெற்ற இவர், திருமணத்துக்கு பின் படித்து, மெட்ரிகுலேஷன் தேர்வில், சென்னை மாகாணத்திலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார்.
சுயமுயற்சியால் தமிழ் கற்று, தன் 25வது வயதில், 'அநுத்தமா' என்ற புனை பெயரில், 'அங்கயற்கண்ணி' என்ற கதையை எழுதி, 'கல்கி' சிறுகதை போட்டியில், இரண்டாம் பரிசு பெற்றார். தொடர்ந்து, 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் 22 நாவல்களை எழுதினார்.
குடும்ப பின்னணி மற்றும் மென்மையான உளவியல் சிக்கல்களை மையமாக்கி கதைகளை எழுதினார். 'மணல் வீடு' நாவலுக்காக, 'கலைமகள்' விருது, 'மாற்றாந்தாய்' சிறுகதைக்காக, 'ஜகன் மோகினி' இதழின் தங்கப் பரிசு, தமிழக அரசின் சிறந்த நாவல் பரிசு உள்ளிட்டவற்றை பெற்ற இவர், தன் 88வது வயதில், 2010, டிசம்பர் 3ல், மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!
மேலும்
-
செய்தி எதிரொலி சவுடு மண் கடத்தினால் 'குண்டாஸ்' கலெக்டர் பிரதாப் எச்சரிக்கை
-
தேசிய அளவிலான வில்வித்தை போட்டி முதலிடம் பிடித்த பொன்னேரி மாணவி
-
பைக் மீது ஆட்டோ மோதி ஒருவர் பலி
-
விபத்தால் மனமுடைந்தவர் தற்கொலை
-
முத்துக்கொண்டாபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடுக்கு தீர்வு காண கோரிக்கை
-
பிரசாரத்தில் சீமான் முதலிடம்!