தங்கம், வெள்ளி விலை மேலும் உயர வாய்ப்பு 'ஆக்மன்ட் புல்லியன்' கணிப்பு
போர் பதற்றம் குறைந்து வருவதால் ஏற்பட்ட முதலீட்டு மாற்றங்கள் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளி விலையில் நேற்று சிறிய சரிவு காணப்பட்டது.
எம்.சி.எக்ஸ்., சந்தையில், ஜூன் மாதத்துக்கான முன்பேர வர்த்தக ஒப்பந்தத்தில், 10 கிராம் தங்கம் விலை, 644 ரூபாய் சரிந்து, 1.54 லட்சம் ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது.
இருப்பினும், சந்தையில் தொடர்ந்து 1.55 லட்சம் ரூபாய் என்ற வலுவான நிலையிலேயே நீடிக்கிறது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் (31.100 கிராம்) தங்கம் 4,809 டாலராக குறைந்தது.
ஒரு கிலோ வெள்ளியின் விலையும் 2,170 ரூபாய் சரிந்து, 2.52 லட்சம் ரூபாய் என்ற அளவில் வர்த்தகம் செய்யப்பட்டது.
அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதி பேச்சு குறித்த நம்பிக்கையால், முதலீட்டாளர்கள் தங்கத்திலிருந்து பங்குகளை நோக்கி முதலீட்டை திருப்பியதே இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தங்கத்தின் அடுத்தகட்ட விலை உயர்வு 1.60 லட்சம் ரூபாயாகவும், வெள்ளியின் விலை 2.55 லட்சம் முதல் 2.65 லட்சம் ரூபாய் வரையிலும் உயர வாய்ப்புள்ளதாக 'ஆக்மன்ட் புல்லியன்' நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் குறித்த அச்சம் தங்கத்துக்கு ஆதரவாக இருந்தாலும், வட்டி விகித மாற்றங்கள் அதன் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
மேலும்
-
'ஆபத்துகளின் வழித்தடங்களாக விரைவுச்சாலைகள் மாறக்கூடாது': புதிய வழிகாட்டுதல்களை பிறப்பித்தது சுப்ரீம் கோர்ட்
-
நிலக்கரி நகரம் நெய்வேலிக்கு மணி மகுடம் சூட்டும் சாதனைகள்
-
பாட்ஷாவாக மாறும் ஸ்டாலின்; ரஜினி ரசிகர்கள் ஓட்டு சிக்குமா?
-
'ஹிந்து மதத்தை ஏய்ப்பவர்களுக்கு வேட்டு'
-
இறுதிக்கட்டத்துக்கு வந்த தேர்தல் பிரசாரம் துாக்கம் மறந்து ஓட்டு சேகரிப்பு பயணம்
-
நாமக்கல் குறிஞ்சி சீனியர் செகண்டரி பள்ளி மாணவியர் தேர்வில் சாதனை