தவறான பி.எப்., கணக்கை ஊழியரே நீக்குவதற்கு அனுமதி

தவறாக உருவாக்கப்பட்ட பி.எப்., உறுப்பினர் அடையாள எண்களை, பி.எப்., பங்களிப்பு தொகை செலுத்தப்பட்டிருந்தாலும் கூட, அவற்றின் யு.ஏ.என்., எண்ணிலிருந்து நீக்கிக்கொள்ள ஊழியர்களுக்கு இ.பி.எப்.ஓ., தற்போது அனுமதி அளித்துள்ளது. இதற்காக, போர்டல் வாயிலாக விண்ணப்பிக்கும் வசதி மற்றும் பல அடுக்கு சரிபார்ப்பு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


முக்கிய அம்சங்கள்


* தெரியாமல் உருவாக்கப்பட்ட அல்லது தவறாக இணைக்கப்பட்ட உறுப்பினர் அடையாள எண்களில் பணம் டிபாசிட் செய்யப்பட்டிருந்தாலும், அவற்றை இப்போது நீக்க முடியும்
* அதற்கு ஊழியர்கள் 'யுனிபைடு மெம்பர் போர்ட்டல்' வாயிலாக கோரிக்கை விடுக்கலாம்; ஆதார் சார்ந்த 'இ- -கே.ஒய்.சி.,' சரிபார்ப்பு அவசியம்

* இக்கோரிக்கையை நிறுவனம் முதலில் சரிபார்க்கும். அதன் பிறகு மண்டல 'பி.எப்.,' கமிஷனர் ஆய்வு செய்து ஒப்புதல் அளிப்பார்

* ஏற்கனவே கிளைம் செய்யப்பட்ட, செட்டில்மென்ட் நிலையில் உள்ள அல்லது 6 முறைக்கு மேல் பணம் செலுத்தப்பட்ட கணக்குகளை நீக்க முடியாது

* டிசம்பர் 31, 2016க்கு முந்தைய பழைய கணக்குகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் உண்டு.

Advertisement