நாம் எதற்கு 2 ஆயிரம் ரூபாய்க்கு கையேந்த வேண்டும்; பிரசாரத்தில் சீமான் கேள்வி
சிவகங்கை: '' நாம் எதற்கு ஆயிரம் ரூபாய், 2 ஆயிரம் ரூபாய்க்கு கையேந்த வேண்டும். வீட்டிற்கு ஒன்று, இரண்டு பிள்ளைகளுக்கு அரசாங்க வேலை கொடுக்கிறேன்.'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது: நீ இப்பதான் காதலிக்கிறாய், நான் 15 ஆண்டு காலமாக காதலித்து கத்தி கொண்டு இருக்கிறேன். என் காதல் புரிஞ்சிருச்சுனா, நான் வென்றிடுவேன்.
நான் ரொம்ப நாளா ஒன் சைடு லவ்லயே போயிட்டு இருக்கேன். அவன் ரூ.2 ஆயிரம் கொடுக்கிறான். நான் ஒரு வீட்டிற்கு ஹெலிகாப்டர் கொடுக்கிறேன் என சொல்கிறேன். நம்பாமல் சிரிக்கிறான். அவன் சொன்னால் நம்புகிறான், நான் சொன்னால் சிரிக்கிறான். அண்ணன் சும்மா சொல்கிறார் என்கிறான்.
தேன்நிலவு
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கிலோ தங்கம், புதிதாக திருமணமான பெண்களுக்கு ஒரு கிலோ வைரமும் விரும்பிய நாட்டிற்கு தேன்நிலவு பயணம் செல்லவும் ஏற்பாடு செய்யப்படும். வேறு ஏதாவது வேண்டுமா?
ஹெலிகாப்டரை மொட்டை மாடியில் போட்டுக் கொடுத்து விடுகிறேன். டேய் உடன் பிறந்தவர்களை இனி திருந்தி தொலையுங்கள். ரத்தம் கொதிக்கிறது, மாறுங்கள். நாம் எதற்கு ஆயிரம் ரூபாய், இரண்டு ஆயிரம் ரூபாய்க்கு கையேந்த வேண்டும். வீட்டிற்கு ஒன்று, இரண்டு பிள்ளைகளுக்கு அரசாங்க வேலை கொடுக்கிறேன்.
பெரிய பூட்டு
ஒரு வட இந்தியன் தேவை இங்கு இருக்காது. வந்த வழியிலேயே தொடர் வண்டியில் ஏறி போய்விடுவான். என் பிள்ளைகளுக்கு படிப்பிற்கு ஏற்ற பயிற்சி கொடுத்து, திறன் மேம்பாடு கொண்டு வருவேன். வந்த உடனே டாஸ்மாக்கிற்கு பெரிய பூட்டாக போட்டு மூடிவிட்டு, இனிமேல் சரக்கு காய்ச்சப்பட மாட்டாது.
சரக்குகள் எடுத்து விற்கப்பட மாட்டாது. கடைகளில் இருக்கும் சரக்குகளை மதுப்பிரியர்கள் எடுத்து குடித்துக் கொள்ளுங்கள். எதற்கென்றால் அதன் பிறகு சரக்கு வராது. உழைத்து களைத்து வந்தவர்களுக்கு பனம்பால், தென்னம்பால் இருக்கிறது. திறந்து விடுகிறேன் நல்லா குடித்துக்கொள். இவ்வாறு சீமான் பேசினார்.
மக்களிடம் திரள் நிதி வாங்கி பத்து ஆண்டுகளாக அந்த பணத்தை சுயநலமாக வீணாக்கி கொண்டு இருக்கிறிர்கள் அதனால் தான்
ஆமாம் சீமான் போல எல்லோரும் கோடிகளில் பிச்சை எடுங்கள் அவரே ஒரு பேட்டியில் ஒரு நடிகர் தனக்கு சில லட்சங்களை பிச்சை போட்டதாக சொன்னார் .அவரால் பணம் கொடுக்க முடியாது அதனால் சொன்னார் மதவாதம் வேண்டாம் என்பார் இனவாதம் மொழி அடிப்படை பிரிவுகளை ஆதரிப்பார்
தன்மானம் இல்லை
ஒரு தலைவனுக்கு தேவையான தனி நபர் ஒழுக்கம் கழகங்கள் அரசியலுக்கு வந்த அறுபதுகளிலேயே போய் விட்டது.
அப்பன்னா தற்குறிகள தேர்ந்தெடுக்க சொல்றியா
மக்கள் ஆயிரம் இரண்டாயிரத்திற்கு கையேந்த வில்லை.வங்கி கணக்கில் வந்துவிடுகிறது
நீங்கள் என் ஈழ தமிழன் பிரபாகரன் பேர் சொல்லி திரள்நிதி என்று கையேந்த வேண்டும் சீமான் க்கு நாம் கேட்போம்