காஞ்சிபுரம் மாவட்டம் இனிதாக பகுதி
பிரம்மோத்சவம் குதிரை வாகனம், தேவி எல்லம்மன் கோவில், ஊத்துக்காடு கிராமம், வாலாஜாபாத், இரவு 7:00 மணி.
திருப்பள்ளியெழுச்சி பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம். காலை 5:30 மணி; திருக்கஞ்சி அமுது வழங்குதல், காலை 7:00 மணி. அன்னதானம், மதியம் 1:00 மணி.
சொற்பொழிவு தலைப்பு: சிவனும் திருமாலும் நகரத்திற்கு உத்தரவின்றி வரமாட்டார்-மனிதனுக்காக அஞ்சாது வந்த நீ யார் - இராவணன் அங்கதனிடம் கேள்வி, சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்த்துறை, கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கீழம்பி, காஞ்சிபுரம். காலை 11:00 மணி.
* காஞ்சி புராணம் தொடர் சொற்பொழிவு, தலைப்பு: காஞ்சி புராணம் இரண்டாவது பாகம் தொடர் விரிவுரை, சொற்பொழிவாளர்: புலவர் அண்ணா சச்சிதானந்தம், தொண்டை மண்டல ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச சுவாமிகள் திருமடம், உபதலைவர் பரமசிவம் தெரு, பெரிய காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.
சிறப்பு வழிபாடு உத்திரட்டாதி நட்சத்திரம், சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம். காலை 7:30 மணி.
இரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர், காலை 7:00 மணி.
* வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.
* சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
* வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
* விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர், காலை 7:00 மணி.
* சோதிபுரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம், காலை 7:00 மணி.
* மாகரலீஸ்வரர் கோவில், மாகரல் கிராமம், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
* காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.
* கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
* காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை, 7:00 மணி.
ஆலோசனை கூட்டம் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் காஞ்சிபுரம் மண்டல ஆலோசனை கூட்டம், துளுவ வேளாளர் சங்கம், மச்சேஸ்வரர் திருமண மண்டபம், கிழக்கு ராஜ வீதி ,காஞ்சிபுரம், காலை 10:00 மணி.
அன்னதானம் அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம். பகல் 12:00 மணி.
* மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம். காலை 8:30 மணி; பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.
* ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம். உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம். பிற்பகல் 12:00 மணி.