மாவட்டத்தில் தனிநபர் வாகனங்கள் அதிகரிப்பு ஒரு ஆண்டில் 24,174 வாகனங்கள் பதிவு

தேனி: தேனி மாவட்ட தனிநபர் வாகனங்கள் பதிவு 2025ல் அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் 24,197 புதிய வாகனங்கள் பதிவாகி உள்ளது.

தேனி, உத்தமபாளையத்தில் ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் செயல்படுகின்றன. இவ்வலுவலகங்களில் 2025 ஆண்டில் தனிநபர்கள் பயன்படுத்தும் கார், டூவீலர் முன்பதிவு அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு பின், பலரும் சொந்த வாகனங்கள் பயன்படுத்து அதிகரித்துள்ளது.

தேனி ஆர்.டி.ஓ., அலுவலகம் மூலம் 582 மொபட்டுகள், 10,034 ஸ்கூட்டர்கள், 1510 கார்கள், 255 டிராக்டர்கள், 208 பயணிகள் ஆட்டோ, 25 கல்வி நிறுவன பஸ்கள் என மொத்தம்13,326 வாகனங்கள் பதிவாகி உள்ளன. உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் 2025ல் 246 விவசாய டிராக்டர்கள் புதிதாக பதிவாகி உள்ளது.

மேலும் 14 கல்வி நிறுவன பஸ்கள், 217 சரக்கு வாகனங்கள், 8455 ஸ்கூட்டர்கள், 1147 கார்கள், 111 பயணிகள் ஆட்டோ, ஒரு ஆம்புலன்ஸ் என மொத்தம் 19,871 வாகனங்கள் புதிதாக பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஒட்டு மொத்தமாக தேனி மாவட்டத்தில் 24,197 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தேனி ஆர்.டி.ஓ., மாணிக்கம் கூறியதாவது: மாவட்டத்தில் வாகனங்கள் பதிவு செய்வது மாதந்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டுகளை விட 2025 ல் தனிநபர்கள் பயன்பாட்டு வாகனங்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது என்றார்.

Advertisement