வாக்காளர் பட்டியலில் புதிதாக 9670 பேர் சேர்ப்பு 1504 பேர் நீக்கம்

தேனி: தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியிலில் புதிதாக 9670 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 1504 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர்பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முடிந்து பிப்.,23ல் வாக்காளர்பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில் ஆண்கள் 5.02 லட்சம் பெண்கள் 5.30 லட்சம், இதரர் 175 என மொத்தம் 10,33,373 பேர் இடம் பெற்றிருந்தனர். அதன் பிறகும் வாக்காளர்களிடம் இருந்து பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பங்கள் பெற்றப் பட்டன.

ஏப்.,6ல் தேர்தல் ஆணையம் புதிய வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. அதிகபட்சமாக பெரியகுளம்(தனி) தொகுதியில் 2713 பேர் உட்பட மாவட்டத்தில் 9670 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

1504 பேர் நீக்கப்பட்டுள்ளனர். ஆண்கள் 5.06 லட்சம், பெண்கள் 5.35 லட்சம், இதரர் 178 என மொத்தம் 10.41 லட்சம் பேர் இடம் பெற்றுள்ளனர்.

Advertisement