நன்றி கடனாக நான் பணி செய்திட உதயசூரியனுக்கு ஓட்டளியுங்கள் :அன்னியூர் சிவா தீவிர பிரசாரம்

விக்கிரவாண்டி: தொகுதி மக்களுக்கு நன்றிக் கடனாக நான் பணி செய்திட உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு போடுங்கள் என விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க., வேட்பாளர் அன்னியூர் சிவா தேர்தல் பிரசாரம் செய்தார்.

விக்கிரவாண்டி தொகுதி காணை ஒன்றியம், ஆரியூர், சாணி மேடு வெங்கந்துார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அவர் ஓட்டு சேகரித்து பேசுகையில், 'தொகுதி விவசாயிகள் பயன்பெற நந்தன் கால்வாய் திட்டம், அன்னியூரில் அரசு கலைக் கல்லுாரி, செல்லங்குப்பத்தில் மாதிரி அரசு பள்ளி, சாலை வசதி, பஸ் வசதி, தரம் மேம்படுத்திய மருத்துவமனை என பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளேன்.

இடைத்தேர்தலில் வெற்றி பெறச் செய்து தேர்வு செய்த நன்றிக் கடனாக கடந்த 18 மாதங்களில் நான் தொகுதிக்கு நிறைய செய்துள்ளேன் முதல்வர் ஸ்டாலின் என்னை மனதார பாராட்டினார்.

நான் தொகுதிக்கு செய்த நன்றிக் கடனாக நீங்கள் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன்' என்றார்.

தொகுதி பொறுப்பாளர் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் ஒன்றிய செயலாளர்கள் முருகன், ராஜா திட்டக்குழு தலைவர் முருகன் வி.சி., மாவட்ட செயலாளர் காணை வளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement