நெல்லுக்கு நல்ல விலை வழங்கிட மாம்பழத்திற்கு ஓட்டளியுங்கள்: பா.ம.க., வேட்பாளர் சிவக்குமார்
விக்கிரவாண்டி: 'விவசாயிகளுக்கு நெல்லுக்கு நல்ல விலை வழங்கிட அ.தி.மு.க., ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கு மாம்பழம் சின்னத்துக்கு ஓட்டளியுங்கள்' என விக்கிரவாண்டி தொகுதி பா.ம.க., வேட்பாளர் சிவகுமார் பிரசாரம் செய்தார்.
விக்கிரவாண்டி தொகுதி அனுமந்தபுரம், திருக்குணம், உமையாள்புரம், பனமலை பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டு கேட்டு பேசுகையில், 'விவசாயிகள் இந்த ஆட்சியில் நெல்லுக்கு அரசு மானிய விலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் நெல்லுக்கு கூடுதல் விலை வழங்கப்படும். கல்விக் கடன் ரத்து செய்யப்படும். விவசாய விளை பொருட்களுக்கான விலை நிர்ணயிக்கப்படும்.
இது போன்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் கிடைத்திட தேர்தலில் பா.ம.க., வேட்பாளராகிய எனக்கு மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன்' என்றார்.
அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ., முத்தமிழ்ச்செல்வன், வழக்கறிஞர் அணி ஸ்ரீதர், ராமலிங்கம், முன்னாள் ஒன்றிய செயலாளர் அரங்கநாதன், பா.ம.க., மாவட்ட தலைவர் புகழேந்தி ஒன்றிய செயலாளர்கள் அன்னியூர் சிவசக்தி, மோகன், சுரேஷ், கலையரசன், சுபாஷ் சந்திர போஸ், சந்திரசேகர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.