ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தம் பணி நடந்தது.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்துார், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், திருச்சுழி ஆகிய தொகுதிகளில் வைக்கப்பட்டுள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் புகைப்படத்துடன் கூடிய வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தம் பணிகள் நடந்தது.
இதை மாவட்ட தேர்தல் அலுவலர் சுகபுத்ரா பார்வையிட்டார். 7 சட்டசபை தொகுதிகளிலும் 3741 ஓட்டுப்பதிவு இயந்திரம், 2396 கட்டுப்பாட்டு இயந்திரம், 2596 விவிபாடுகள் ஆகியவற்றில் தயார் செய்யும் பணி மும்முரமாக நடந்தன. இந்நிலையில் போட்டியிடும் தி.மு.க., அ.தி.மு.க., காங். பா.ஜ., த.வெ.க., நா.த., உள்ளிட்ட பல்வேறு கட்சியின் 147 வேட்பாளர்களின் புகைப்படத்துடன் கூடிய பெயர், சின்னம் பொருத்தும் பணி நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
எடப்பாடியில் சுயேச்சைக்கு ஆதரவு: கடைசி நேரத்தில் விஜய் திடீர் முடிவு
-
நடைபயிற்சியில் ஓட்டு சேகரித்த சீமான்: காரைக்குடியில் கடைசி கட்ட பிரசாரம்
-
இன்னும் 4 நாட்கள் தான்; அனல் பறக்கும் அரசியல் கள செய்திகளுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்
-
மாட்டில் பால் எங்கிருந்து வருகிறது என்பது கூட முதல்வருக்கு தெரியாது: பா.ஜ., அண்ணாமலை விமர்சனம்
-
குமரியில் நாளை ராகுல் பிரசாரம்
-
ஸ்டாலின் வெல்லட்டும் நாடு சுடுகாடாகட்டும்: நா.த.க., சீமான் சாபம்