வீரமரணமடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு நினைவு அஞ்சலி

விழுப்புரம்: பணியின்போது வீரமரணமடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, துணை இயக்குநர் தென்னரசு தலைமை தாங்கினார். மாவட்ட அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், பணியின்போது வீரமரணமடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

உதவி மாவட்ட அலுவலர்கள், நிலைய அலுவலர் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்டத்தில் உள்ள 10 தீயணைப்பு நிலையங்களிலும் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertisement