வடக்கு தொகுதியில் அரசு கலைக்கல்லுாரி

திருப்பூர்: திருப்பூர் வடக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில், போட்டியிடும், இந்திய கம்யூ. வேட்பாளர் ரவி, தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களைச் சந்தித்து ஓட்டு சேகரித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இந்திய கம்யூ. மாநில மற்றும் தேசிய நிர்வாகிகள் அவருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தனர். நேற்று பெருமாநல்லுார் ரோடு பகுதியில் வேட்பாளர் ரவி, தனது பிரசார வாகனத்தில் பயணித்தவாறு, வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினார். பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று வேட்பாளரும் அவரது ஆதரவாளர்களுடம் பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தனர்.

பிரசாரத்தின் போது வேட்பாளர் ரவி பேசியதாவது:

திருப்பூர் வடக்கு தொகுதியில் அரசு கலைக் கல்லுாரி இல்லை. அதனை இப்பகுதியில் அமைக்க சட்டசபையில் குரல் கொடுப்பேன். திருப்பூர் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் தேவையான இடங்களில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

நமது திருப்பூர் நகரம் உரிய உட்கட்டமைப்பு வசதியின்றி உள்ளது. அதற்கான புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும். மக்கள் நலனில் அக்கறை கொண்ட தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர வேண்டும். வடக்கு தொகுதி வளர்ச்சி பெற கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

வேட்பாளர் ரவி இன்று பெருமாநல்லுார், காளிபாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் வாக்காளர் களைச் சந்தித்து ஆதரவு திரட்டி பிரசாரம் செய்கிறார்.

Advertisement