தேர்தல் பணி அலுவலர்களுக்கு இன்று முதல் தபால் ஓட்டுப்பதிவு

திருப்பூர்: தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு, இன்று முதல் வரும் 20ம் தேதி வரை நடைபெறுகிறது.

மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள அறிக்கை:

தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் இதர துறை சார்ந்த அலுவலர்களுக்கு, 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை தபால் ஓட்டுப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தேதியில் மாற்றம் செய்யப்படுகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான தபால் ஓட்டுபதிவு, 17ம் தேதி முதல் (இன்று முதல்), வரும்20ம் தேதி வரை நடைபெறும்.

தாராபுரத்தில், ஆர்.டி.ஓ., அலுவலகம், காங்கயத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அவிநாசியில் தாலுகா அலுவலகம், திருப்பூர் வடக்கு தொகுதியில், 15 வேலம்பாளையத்திலுள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம், திருப்பூர் தெற்கு தொகுதியில், டவுன்ஹால், பல்லடத்தில், தாலுகா அலுவலகம், உடுமலையில் ஆர்.டி.ஓ. அலுவலகம், மடத்துக்குளம் தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களில், தபால் ஓட்டு பதிவு நடைபெறும்.

Advertisement