உங்களுக்கான முதல்வர் ஸ்டாலின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்
பல்லடம்: ''உங்களுக்கான முதல்வர் ஆட்சிக்கு வர உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்கள்,' என, பல்லடம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வராஜ் பிரசாரம் மேற்கொண்டார்.
வேட்பாளர் செல்வராஜ், பல்லடம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் நேற்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட போது, பேசியதாவது:
திருப்பூர் தெற்கு தொகுதி மக்களுக்காக எம்.எல்.ஏ.,வாக பணியாற்றி வந்த என்னை, முதல்வர் தான், பல்லடம் தொகுதிக்கு தேர்வு செய்தார். தி.மு.க., ஆட்சியின் சாதனைகளை கூறி ஓட்டு சேகரிக்குமாறு என்னிடம் அறிவுறுத்தி உள்ளார். மீண்டும் ஸ்டாலின் தமிழக முதல்வராக வருவது உறுதி. ஏனெனில், மற்ற கட்சிகளைப் போன்று வாக்குறுதி அளித்துவிட்டு ஏமாற்றும் கட்சி தி.மு.க., அல்ல.
தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களே இதற்கு உதாரணம். மகளிர் உரிமைத்தொகை திட்டம், அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் எதிர்வரும் தி.மு.க., ஆட்சி காலத்தில் விரிவுபடுத்தப்பட உள்ளன.
உங்கள் பகுதியில் குடிநீர் பிரச்னை, பட்டா கிடைக்காதது, சாலை வசதி உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பதை அறிந்தேன்.
வெற்றி பெற்று வந்த பின் உறுதியாக உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன். சொன்னதை செய்யும் முதல்வர் இருப்பதால், கோரிக்கைகள் அனைத்தையும் கட்டாயம் நிறைவேற்றித் தருவார். எனவே, உங்களுக்கான முதல்வர் மீண்டும் ஆட்சியில் அமர உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, காலை உணவு திட்டம் குறித்து பொதுமக்களிடம் அவர் பேசிக் கொண்டிருக்க, அரசு பள்ளி குழந்தைகள், அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும்
-
இன்னும் 4 நாட்கள் தான்; அனல் பறக்கும் அரசியல் கள செய்திகளுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்
-
மாட்டில் பால் எங்கிருந்து வருகிறது என்பது கூட முதல்வருக்கு தெரியாது: பா.ஜ., அண்ணாமலை விமர்சனம்
-
குமரியில் நாளை ராகுல் பிரசாரம்
-
ஸ்டாலின் வெல்லட்டும் நாடு சுடுகாடாகட்டும்: நா.த.க., சீமான் சாபம்
-
ஓடும் பஸ்சில் மாரடைப்பு: 50 பயணிகளை காப்பாற்றி தனியார் பஸ் டிரைவர் மரணம்
-
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வில் வெற்றி ஐ.ஏ.எஸ்., மாணவர்கள் சாதனை