குண்டூசி முதல் அழியா மை வரை... வாக்குச்சாவடி பொருட்கள் வந்தன
திருப்பூர்: சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 2,822 வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான அனைத்துத் தேர்தல் பொருட்களும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தடைந்துள்ளன.
80 வகை உபகரணங்கள் வாக்குப்பதிவு நாளன்று ஒரு வாக்குச்சாவடியில் 80-க்கும் மேற்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் குண்டூசி, பென்சில், நுால், அளவு கோல் போன்ற எழுதுபொருட்கள் முதல், வாக்காளர் பதிவு படிவங்கள், ரப்பர் ஸ்டாம்ப்கள், அழியாத மை பாட்டில்கள் மற்றும் மை வைக்கும் கிண்ணங்கள் வரை அனைத்தும் அடங்கும். வாக்குப்பதிவு ரகசியத்தைக் காக்கப் பயன்படுத்தப்படும் மறைவு அட்டைகளும் தயார் நிலையில் உள்ளன.
விழிப்புணர்வு அட்டைகள் வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பிடம், சாய்தளம் போன்ற வசதிகளைக் குறிப்பிடும் விளக்கப்பட அட்டைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கண்காணிப்பு கேமரா குறித்த எச்சரிக்கை ஸ்டிக்கர்கள் எனத் தேர்தல் ஆணையம் வழங்கிய அனைத்துத் தளவாடங்களும் வந்து சேர்ந்துள்ளன.
தொகுதி வாரியாகப் பிரிப்பு ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இப்பொருட்கள், தற்போது 8 சட்டசபை தொகுதிகளுக்கும் தனித்தனியாகப் பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றன. அந்தந்த தொகுதிப் பொறுப்பாளர்கள் வாகனங்கள் மூலம் இப்பொருட்களைப் பெற்றுச் செல்கின்றனர்.
வழங்கும் முறை வாக்குப்பதிவு தினமான 23-ம் தேதிக்கு ஒருநாள் முன்னதாக (ஏப். 22), ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தேவையான 80 வகை பொருட்களும் தனித்தனிப் பைகளில் அடைக்கப்பட்டு, அந்தந்த வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படும்.
தேர்தல் முடிந்த பிறகு, இந்தப் பொருட்கள் மீண்டும் எண்ணிச் சரிபார்க்கப்பட்டு மண்டல அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
யார் உங்கள் வேட்பாளர்?
-
அண்ணாமலை, வானதி ஒரே ஸ்கூட்டரில் பிரசாரம்; பா.ஜ., தொண்டர்கள் மலர் துாவி ஆரவாரம்
-
பா.ஜ., வேட்பாளர் முருகனுக்கு ஆதரவாக ம.பி. முதல்வர் மோகன் யாதவ் 'ரோடு ஷோ'
-
தி.மு.க., ஆட்சி அடித்து விரட்டப்பட வேண்டிய தீய ஆட்சி: எச்.ராஜா
-
ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் தப்பு வாங்குவதும் தப்பு: சொல்கிறார் செந்தில் பாலாஜி
-
த.வெ.க., தலைவர் விஜயை பார்த்து தி.மு.க., கூட்டணியினர் உற்சாகம்