மாணவர், மகளிருக்கான திட்டங்கள் உதயசூரியனுக்கே உங்கள் ஓட்டு
திருப்பூர்: திருப்பூர் தெற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் தினேஷ்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
நேற்று தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் கொங்கணகிரி பகுதிக்கு உட்பட்ட 27, 29 ஆகிய மாநகராட்சி வார்டு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
பகுதி செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, வார்டு செயலாளர்கள் ரவிச்சந்திரன், குமார், சுகுமார், ஜெய்சங்கர் உள்ளிட்டோரும், கூட்டணியைச் சேர்ந்த காங். - கம்யூ. - முஸ்லிம் லீக் - வி.சி.- கொ.ம.தே.க. உள்ளிட்ட நிர்வாகிகளும் இந்த பிரசாரத்தின் போது உடன் சென்றனர்.
40க்கும் மேற்பட்ட பகுதிகளில் வேட்பாளர் தினேஷ்குமார் வாக்காளர்களைச் சந்தித்து பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது:
காலேஜ் ரோடு, கொங்கணகிரி உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. காலேஜ் ரோடு ரிங் ரோட்டை இணைக்கும் வகையிலான ரயில்வே பாதை மற்றும் நொய்யல் ஆற்றைக் கடக்கும் வகையில் உயர் மட்ட மேம்பாலம் இந்த ஆட்சியின் போது அமைக்கப்பட்டது.
பல ஆண்டுகளாக கிடப்பில் போட்டிருந்த இந்த பாலம் கட்டுமானப் பணியை தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் முழு முயற்சி மேற்கொண்டு பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தி, பாலம் கட்டும் பணி மீண்டும் துவங்கியது. தற்போது, மிக விரைவில் இது திறப்பு விழா காண உள்ளது. மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்கியது; நான் முதல்வன் திட்டத்தில் 45 லட்சம் மாணவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு உதவித்தொகை, மகளிர் உதவித்தொகை, சுய உதவிக்குழுக்கள் மேம்பாடு; இலவச பஸ் பயண திட்டம் என இந்த அரசு மாணவர்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டுக்கு பல திட்டங்களை வழங்கியுள்ளது.
இது போன்ற திட்டங்கள் தொடர, தி.மு.க.வுக்கு ஆதரவு தாருங்கள். உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.
மேலும்
-
இன்னும் 4 நாட்கள் தான்; அனல் பறக்கும் அரசியல் கள செய்திகளுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்
-
மாட்டில் பால் எங்கிருந்து வருகிறது என்பது கூட முதல்வருக்கு தெரியாது: பா.ஜ., அண்ணாமலை விமர்சனம்
-
குமரியில் நாளை ராகுல் பிரசாரம்
-
ஸ்டாலின் வெல்லட்டும் நாடு சுடுகாடாகட்டும்: நா.த.க., சீமான் சாபம்
-
ஓடும் பஸ்சில் மாரடைப்பு: 50 பயணிகளை காப்பாற்றி தனியார் பஸ் டிரைவர் மரணம்
-
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வில் வெற்றி ஐ.ஏ.எஸ்., மாணவர்கள் சாதனை