சித்திரை திருவிழா ஏப்., 21ல் காப்பு கட்டுதலுடன் துவக்கம்: ஏப்., 30ல் தேரோட்டம்

உத்தரகோசமங்கை:உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரை விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

இவ்வாண்டு ஏப்., 21 அன்று இரவு 7:00 மணிக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்குகிறது. மறுநாள் ஏப்., 22 புதன்கிழமை காலை 9:00 மணிக்கு கொடியேற்றம், காலை வேளைகளில் உற்ஸவ மூர்த்திகள் பல்லக்கிலும், இரவில் பேச்சி வாகனம், சிம்மம், அன்னம், கிளி, காமதேனு, ரிஷபம், தாமரை உள்ளிட்ட வாகன சேவை நடக்க உள்ளது. வருகிற ஏப்., 30 மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் நடக்க உள்ளது.

Advertisement