ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தில் பா.ஜ.,வினர் ஆய்வு

முதுகுளத்தூர்: - முதுகுளத்துார் தனியார் பள்ளி மைதானத்தில் ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தில் பா.ஜ., நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.

முதுகுளத்துார் சட்டசபை தொகுதி தே.ஜ., கூட்டணி கட்சியின் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் மலேசியா பாண்டி ஆதரித்து பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நாளை (ஏப்.,16ல்) காலையில் பிரசாரம் செய்ய உள்ளார். இதையடுத்து முதுகுளத்துார் தனியார் பள்ளி மைதானத்தில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தில் பா.ஜ., நிர்வாகிகள் ஹெலிகாப்டர் இறக்கும் தளத்தை ஆய்வு செய்தனர். இங்கிருந்து காரில் பயணம் செய்து பஸ் ஸ்டாண்ட் முன்பு அண்ணாமலை பிரசாரம் செய்ய உள்ளார்.

Advertisement