கிரிக்கெட்: ஆக்கூர் அணி வெற்றி

காஞ்சிபுரம்: ஆக்கூரில் நடந்த வட்டார அளவிலான கிரிக்கெட் போட்டியில் ஆக்கூர் அணியினர் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

காஞ்சிபுரம் வந்தவாசி சாலை, ஆக்கூர் கிராமத்தில் ஏ.எப்.சி., கிரிக்கெட் அணி சார்பில், முதலாம் ஆண்டு வட்டார அளவிலான கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஆக்கூர், நேத்தப்பாக்கம், மடிப்பாக்கம், மகாஜனம்பாக்கம், கூழமந்தல், பெருநகர் உள்ளிட்ட 15 கிரிக்கெட் அணிகள் பங்கேற்றன.

இறுதி போட்டியில், ஆக்கூர் கிரிக்கெட் அணியும், நேத்தப்பாக்கம் அணியும் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த நேத்தப்பாக்கம் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவரில், 6 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் எடுத்தனர்.

அதை தொடர்ந்து விளையாடிய ஆக்கூர் அணியினர் 10 ஓவரில், 3 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்தனர். இதன்மூலம், ஆக்கூர் அணியினர் 7 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றனர்.

Advertisement