எம்ஜிஆரிடம் மூன்று முறை தோற்றவர் கருணாநிதி: அண்ணாமலை
துாத்துக்குடி: ''தமிழக மக்கள், திமுக ஆட்சியை ஒருமுறை பார்த்து விட்டால், அடுத்த முறை ஒதுக்கி வைத்து விடுவர்,'' என, பாஜ முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார்.
அப்போது அண்ணாமலை பேசியதாவது: கோவில்பட்டியில் திமுக வேட்பாளரின் பெயர் கருணாநிதி. இந்த பெயர் இருந்தாலே தேர்தலில் தோற்க மாட்டார்கள் என, திமுக - எம்பி கனிமொழி பிரசாரத்தில் கூறியுள்ளார். ஆனால், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் இருக்கும்போது, கருணாநிதியின் முதல்வர் கனவு மூன்று முறை கலைந்து போனது. எம்ஜிஆரிடம் மூன்று முறை தோற்று போனவர் கருணாநிதி. தமிழக அரசியல் வரலாற்றில், கருணாநிதி ஒரு முறை முதல்வராக வந்தால், தொடர்ச்சியாக இரண்டாவது முறை முதல்வராக வந்தது இல்லை.
திமுக ஆட்சியை ஒருமுறை பார்த்து விட்டால், அடுத்த முறை மக்கள் ஒதுக்கி வைத்து விடுவர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு முறை அல்ல, இரண்டு முறை திமுக ஆட்சியை ஒதுக்கி வைத்திருந்தார்.
தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் 2,050 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. 8,008 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன. தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் கஞ்சா புழக்கத்தை தடுக்க வேண்டும். கல்வி நிலையங்கள் அருகில் கூட கஞ்சா விற்பனை நடக்கிறது. அதில் திமுகவினரே குற்றவாளிகளாக உள்ளனர். ஆனால் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக கனிமொழி பொய் சொல்கிறார்.இவ்வாறு அவர் பேசினார்.
சொந்த கட்சி ஆட்களால் ஒதுக்கி வைக்க பட்டவர்
3முறை கலைஞர் ஆட்சிக்கு வரமுடியவில்லைதான். ஜெயலலிதாவை 1996 தேர்தலில் பர்கூர் தொகுதியில் தோற்கடித்தவர் கலைஞர். ஒரு முறைகூட கலைஞர் தேர்தலில் தோல்வி அடையாதவர். அண்ணாமலைக்கு வரலாறு தெரியவில்லையே.... பாவம்... ஏதோ பிதற்றுகிறார் அவ்வளவுதான்.
சென்னை துறைமுகம் தொகுதியில் தோல்வி அடைந்த கருணாநிதியை மறு வாக்கு எண்ணிக்கை மூலம் வெற்றி பெற வைத்தவர் MGR. உமக்கு தான் வரலாறு தெரியவில்லை
நீங்க வாழ்க்கைலயே இது வரை ஜெயிக்கத்தவர்
ஏல அரைவேக்காடு மரியோ. நீயே லண்டனில் அண்டி பிழைகிறே